சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எலும்புத்துண்டு".. ஜவாஹிருல்லா இருக்காரே.. திமுக அராஜகம்.. கண்ணாலேயே பார்த்தோம்: வேலூர் இப்ராஹிம்

ஜவாஹிருல்லாவுக்கு வேலூர் இப்ராஹிம் புது சவால் ஒன்றை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: 2024ல் மறுபடியும் மோடியை, பிரதமராக்கி அழகுபார்க்க உழைத்து கொண்டிருக்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் இப்ராஹிம் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.. என்ன காரணம்?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக சார்பில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இதில் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்றார்..

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. இந்த விமர்சனங்களை பாஜகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.. அதன் சிறு தொகுப்புதான் இது:

திமுக நடிகருக்கு வலை வரிக்கும் பாஜக! உட்கட்சித் தேர்தல் அதிருப்தி! கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணகிரி திமுக நடிகருக்கு வலை வரிக்கும் பாஜக! உட்கட்சித் தேர்தல் அதிருப்தி! கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணகிரி

அட்ராசிட்டி

அட்ராசிட்டி

2024ல் மறுபடியும் மோடியை, பிரதமராக்கி அழகுபார்க்க எங்கள் கட்சி நிர்வாகிகள் உழைத்து கொண்டிருக்கிறோம்.. இன்று பாஜகவை கடுமையாக விமர்சிக்ககூடிய திமுக மற்றும் அதன் கூட்டணியை, அவர்கள் செய்யக்கூடிய ஊழல், அராஜக போக்கு நிறைந்துள்ளது.. வாக்குறுதியில் ஒன்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றக்கூடிய, ஏமாற்று பேர்வழிகளையும், அயோக்கியர்களின் கும்பலாக இருக்கக்கூடிய இந்த திமுக அரசின் அவலங்களை எடுத்துச் சொல்லி வருகிறோம்.

 பாரத் மாதா

பாரத் மாதா

சமீபத்தில் கிராம சபை கூட்டம் நடந்ததே, அதில் அமைச்சர்கள் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டனர் என்பதை பார்க்கும்போது, தமிழர்களும் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனியக்கூடிய கேவலமான சூழல் வந்துள்ளது.. ஒரு பெண்மணியை போற்ற வேண்டும், தாயாக மதித்து நடக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தில் பாஜக நடந்து கொண்டு வருகிறது.. அதனால்தான் நாங்கள் பாரத் மாதா கி ஜே என்கிறோம்.. நாங்கள் இந்த நதிகளை, மண்ணை, மரங்களை அனைத்தையுமே எங்கள் தாயை போல மதிக்கிறோம்.

அசிங்கம்

அசிங்கம்

ஆனால், திமுக, திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு, பெண்களை எல்லாம் கிராம சபையில் எவ்வளவு அசிங்கமாக பேசினார்கள்? இந்த அமைச்சர்கள்.. "வா, போ, நீ பேசாதே, அங்கே போய் உட்காரு" இப்படியேல்லாம் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார்கள்.. அதுவும் சாதாரண பாமர பெண்மணிகளை இல்லை.. ஒரு கவுன்சிலரை, ஜனநாயக வேட்பாளராக நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களை அநாகரீகமாக பேசுகிறார்கள்.. அதனால்தான் கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கமாக பேசுங்கள் என்று தன் நிர்வாகிகளுக்கு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

 தலைமுடி

தலைமுடி

பாஜக நபர்கள் ஏதாவது பேசினால், உடனே அடக்குமுறை, எவ்வளவு பொய்வழக்கு போட வேண்டுமோ அவ்வளவு வழக்குகளையும் போட்டுவிடுகிறார்கள்.. நாங்கள் என்னவோ சட்டத்தை மீறுபவர்கள் போன்ற ஒரு பிம்பத்தை தமிழகம் முழுவதும் ஏற்படுத்துகிறார்கள்.. இவர்கள் அராஜகத்தின் உச்சமாக அன்று இருந்ததையே தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. அம்மையார் ஜெயலலிதா தலைமுடியை பிடித்து, இழுத்தது முதல் சட்டசபையில் வேட்டியைஉருவியது வரை எல்லாம் தமிழக மக்கள் மறக்கவில்லை.. எங்களுக்கு ஆன்மீகத்தை பற்றி அறிவுரை சொல்லும் அளவுக்கு பக்குவத்தை பெற்றவர்கள் இவர்கள் கிடையாது..

 எலும்பு துண்டு

எலும்பு துண்டு

1000 ரூபாய் எங்கே என்று கேட்டு பெண்கள் கொந்தளித்து போயுள்ளார்கள்.. அதை பற்றி கேட்டால், ஆட்சி முடிய இன்னும் 5 வருடம் இருக்கிறதாம்.. கொஞ்சமாவது வெ.மா.சூடு சொரணை இருந்தால் இப்படி சொல்வார்களா? கடைசியில் தருவாங்களாமே.. ஏழை பெண்கள் எல்லாம் அழறாங்க.. நம்பி ஓட்டுப்போட்டோம் என்கிறார்கள்.. ஜவாஹிருல்லா இருக்காரே, இந்த திமுகவை எதிர்த்துதான் கட்சியையே ஆரம்பித்தார்.. தமமுகவை இவர் ஆரம்பிக்கும்போதே, "திமுக என்பது இஸ்லாமிய விரோத கட்சி என்று சொல்லி திமுகவை அழிக்க புறப்பட்டவர்கள்".. என்றார்.

ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

ஆனால், இன்னைக்கு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. 2 எலும்புத்துண்டை திமுக போட்டதன் விளைவு, 2 எம்எல்ஏவுக்காக திமுகவிடம் இந்த சமுதாயத்தை பலி தந்து கொண்டிருக்கிறார். வெளிப்படையாக சவால் விடுக்கிறேன், பாஜகவால் இங்கே தமிழர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆபத்தா? அல்லது திமுகவால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஆபத்தா என்பதை என்னுடன் ஜவாஹிருல்லா விவாதிக்க தயாரா? எவ்வளவு காலம்தான் மக்களை நீங்கள் எல்லாரும் ஏமாத்துவீங்க? தனித்தனி மேடை எதுக்கு? வாங்க ஒன்னா பேசுவோம்.. மக்கள் பார்க்கட்டும்..

 எலும்புத்துண்டு

எலும்புத்துண்டு

பிரதமர் எத்தனை திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பதை நான் புள்ளிவிவரத்துடன் சொல்றேன்.. முதல்வர் என்ன செய்தார் என்பதை நீங்க சொல்லுங்க.. தமிழகத்தில் வாக்கு வங்கி அரசியலை நடத்தி கொண்டு, இஸ்லாமிய இளைஞர்களிடம் பயங்கரவாதத்தை நடத்திவிட்டு, கொத்து கொத்தாக ஜெயிலுக்கு போயிட்டு இருக்காங்க.. தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவீங்கன்னு நீங்களே சொல்றீங்க.. அப்படி என்றால், இஸ்லாமிய இளைஞர்களை தூண்டிவிடுவது யார்? ஜவாஹிருல்லா தூண்டிவிடலையா? எஸ்டிபிஐ தலைவர் தூண்டிவிடலையா? நீங்க செய்ற காரியத்தால், தமிழகமே தலைகுனிகிறது.. உங்க 2 எம்எல்ஏ எலும்புத்துண்டுக்காக ஏன் இந்த சமூகத்தை பலியாக்கிறீங்க? என்ஐஏவால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எல்லாம் புனிதர்களா? தேவதூதர்களா?" என்று கேள்வி எழுப்பினார் இப்ராஹிம்.

English summary
Can Jawahirullah discuss with us and DMK alliance will lose in the elections, says BJP Vellore Ibrahim
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X