சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடவுள் இல்லை.. பெரியார் சிலைக்கு கீழ் உள்ள வாசகத்தை நீக்க முடியாது.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!

பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை , கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்ற வாசகம் இடம்பெற்று இருக்கும். தமிழகம் முழுக்க பல இடங்களில் பெரியார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

Cant remove the lines against god from Periyar Statue says Madras High Court

இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். அவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை , கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் எந்த காலத்திலும் அவ்வாறு சொல்லவில்லை. எனவே அந்த வாக்கியங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் திக தலைவர் வீரமணி சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மீனவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு.. அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவுமீனவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு.. அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

பெரியார் உயிருடன் இருக்கும்போதே தனக்கு சிலை வைத்து இதுபோல வாசகங்கள் பொறிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். பல கல்வெட்டுகளையும் பெரியார் திறந்து வைத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பெரியார் கூறியதற்கான ஆதாரங்கள் உள்ளது, அதனால் அந்த வாக்கியங்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

English summary
Can't remove the lines against god from Periyar Statue says Madras High Court in a case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X