"மாட்டிக்கிச்சே".. மெயின் மேட்டரை பிடித்த "தலைவர்".. பாஜக ரூட்டில் டிடிவி தினகரன்.. அப்ப அவங்க?
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் மேற்கொள்ளும் வியூகம் என்ன
சென்னை: பாஜக ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தால், அமமுக வேறு ஒருகணக்கை போட்டு களமிறங்குவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை விரும்பாத நிலையில், பாஜக வேறு ஒரு கூட்டணிக்கு தயாராகும் அல்லது தனித்தும் தேர்தலை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.
காரணம், எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்தால், சொற்ப இடம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.. அப்படியே ஒருசில இடங்கள் ஒதுக்கினாலும், ஒற்றை இடத்தில் வெற்றி பெறுவதே பெரும் சிரமமாகி விடுகிறது..
அதனால்தான், தனித்து போட்டியிடலாமா என்ற யோசனையில் பாஜக உள்ளதாம்.. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. ஓபிஎஸ், எடப்பாடி டீம் பிரிந்துள்ள நிலையில், தேர்தலின்போது, ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் ஆகியோரை உள்ளடக்கிய அணியுடன் இணைந்து போட்டியிட்டால் அது மேலும் பிளஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பாஜக நம்புவதாக தெரிகிறது.

சாப்ட் கார்னர்
பாஜகவை பொறுத்தவரை டிடிவி மீது நிறைய சாப்ட் கார்னர் உள்ளது.. குறிப்பாக அவரது அரசியலில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.. மிக சிறந்த அரசியல் தலைவர் என்ற வரிசையில் அவரை வைத்து பார்க்கிறது.. தினகரன் எப்போது தேர்தலில் நின்றாலும், அமமுக பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுக்கள்தான் என்பதால், இதையும் தங்களுக்கு சாதகமாகவே பாஜக கருதுகிறது. அதனால்தான் வரப்போகும் தேர்தலிலும் தினகரனை குறி வைத்துள்ளதாகவும், அப்படி அமமுகவை கூட்டணியில் இழுத்து போட்டால், நிச்சயம் திமுகவின் ஓட்டுக்களை வெகுவாக பிரித்துவிடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கணக்கு
இன்னொரு கணக்கும் பாஜகவுக்கு உள்ளது.. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், அதிமுகவுக்கு டென்ஷன் எகிறியே கிடக்கும், அதனால் அவர்களுக்குள் அதிகாரப்பிரச்சனை தலைதூக்கி உட்கட்சி பூசல் பெருகினால் அது தங்களுக்கு சாதகம் என்றும் நினைக்கிறது.. அதாவது பாஜகவை எக்காரணம் கொண்டும் நழுவ விட்டுவிடக்கூடாது, தங்கள் பக்கம் வந்தால், எப்படியும் அவரை ஆட்டுவிக்கலாம் என்பதால்தான், அவரை பாஜக கூட்டணிக்கு கொண்டு வரும் அசைன்மெண்ட்களும் முன்பே தரப்பட்டிருந்தன. இப்படி பாஜகவின் கணக்குகள் ஒருபக்கம் இருந்தால், டிடிவி தினகரன் அதற்கு மேல் கணக்கு போடுகிறார். வரப்போகும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்கிறார்.. இதற்கு சில காரணத்தையும் அவரே சொல்கிறார்.

சிக்கல்கள்
"2024-ல் எங்களை மதிக்கக்கூடிய கட்சியுடன் கூட்டணி" என்று சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடமும் டிடிவி தெரிவித்துள்ளார்.. அப்படியானால், தேசிய கட்சி என்றால் இருப்பது 2 கட்சிதான்.. ஒன்று காங்கிரஸ், இன்னொன்று பாஜக.. இதில் காங்கிரசுடன் தினகரனுக்கு பெரிதாக சிக்கல், அதிருப்திகள், எதுவும் கிடையாது.. அதாவது எப்போது வேண்டுமானாலும் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்ற அளவுக்கு இணக்கத்தையே தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் கடைப்பிடித்து வருபவர் டிடிவி.. ஆனால், அதேசமயம், பாஜகவுடன் கூடுதலாக நெருக்கம் காட்டி வருகிறார்.. இந்த நெருக்கம் கடந்த எம்பி தேர்தலின்போதே அவருக்கு இருந்தது..

நழுவிவிட்டார்
அப்போதே பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்றும் தகவல் வெளியானது.. ஆனால், கடைசிநேரத்தில் அது முடியாமல் போயிற்று.. எனவே, இந்த முறை நிச்சயம் பாஜகவை டிடிவி நழுவவிட மாட்டார் என்றே நம்பப்படுகிறது.. அதற்கேற்றாற்படி, கடந்த 5 வருட காலமாகவே பாஜகவை விமர்சிக்காமலும், கண்டிக்காமலும், புகார் சொல்லாமலும் உள்ளார் டிடிவி.. இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தவறில்லை என்று அந்த பேட்டியில் தெளிவாக சொல்கிறார்..

ஆர்கே நகர்
ஆர்கே நகர் தேர்தல் சமயத்தில், "எந்த காலத்திலும் பாஜகவுடன் மட்டும் கூட்டணி கிடையாது" என்று அடித்து சொன்னவர் டிடிவி.. ஆனால், இப்போது கூட்டணிக்கு தயார் என்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு டிவி சேனலில், பாஜகவுடன் கூட்டணி என்கிறீர்களே? இந்த மனமாற்றத்துக்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. அந்த பேட்டியில் டிடிவி சொன்ன காரணம் இதுதான்:

ஸ்டெர்லைட்
"அன்றைக்கு பாஜகவின் செயல்பாடுகள், இன்றைக்கு பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைதான் நாம் பார்க்க வேண்டும்.. அன்றைக்கு ஸ்டெர்லைட் விஷயத்தில், குருவி சுடுவதுபோல் மனிதர்களை சுட்டும்கூட, தமிழக அரசை அவர்கள் கொஞ்சமும் கண்டிக்கவில்லை..அதனால்தான், வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாத சூழல் இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால், அதற்கு பிறகு தமிழகத்தின் மீதும் அவர்கள் கரிசனமாக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் என்ற சமிக்ஞைகள் தெரிவதால், ஒருவேளை அவர்களுடன் கூட்டணி வைக்கலாம்.. அப்படி கூட்டணி வைத்தாலும் அதில் தவறில்லை..

எகிறி அடிக்கும் பாஜக
தமிழகத்தை மாற்றந்தாய் போல் நடத்துவதில் இருந்து மாறி வந்துட்டாங்க.. ஜிஎஸ்டி நிதியை நமக்கு தர வேண்டியதை தந்துவிட்டார்கள்.. ஸ்டெர்லைட் மூடப்பட்டுள்ளது.. இன்றைக்கு தமிழகத்துக்கு பெரிய கஷ்டங்களை கொடுக்கிற திட்டங்களை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஈத்தேன் எல்லாமே நிறுத்தப்பட்டுள்ளது.. பெரிய அளவுக்கு தமிழகத்துக்கு தொந்தரவு இல்லை.. அவர்கள் மாறியிருப்பதால்தான், 4 சீட்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்" என்றார்.. தங்கள் பக்கம் வசமாக மாட்டிக் கொண்டு டிடிவி கூட்டணிக்கு வர வேண்டும் என்று பாஜக அழுத்தம் தர துவங்கிய காலம்போய், இப்போது, டிடிவியே பாஜக பக்கம் விரும்பி செல்லும் சூழல் கைகூடி உள்ளதாகவே தெரிகிறது.. பார்ப்போம்..!

ஸ்கெட்ச்
அதுமட்டுமல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கிய தகவல் பரபரத்தது.. தினகரனை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை அன்று பாஜக கையில் எடுத்தது.. அப்போதுதான், அமலாக்கத்துறை விசாரணையை ஏவி, டிடிவியை டென்ஷனாக்கியது.. ஆனால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்த நிலையிலும், தினகரன் அமைதியாகவே இருந்ததாக தெரிகிறது.. இதற்கு, அமமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு, ஸ்கெட்ச் போட பாஜக முயன்றது.. இதற்கு பிறகுதான், தினகரன் உஷார் ஆனாராம்..

ஓவர்டேக்
உடனடியாக, மண்டல பொறுப்பாளர்களை மாவட்ட ரீதியாக ஆய்வு செய்ய சொல்லி உத்தரவிட்டார்.. அதற்கு பிறகு, கட்சி பணிகளையும் முடுக்கவிட்டு, தீவிர அரசியலில் இறங்க ஆரம்பத்தார்.. ஒருகட்டத்தில், அதாவது சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு, சோர்ந்து போய் போய் ஒதுங்கியிருந்தார் தினகரன்.. போதாக்குறைக்கு சசிகலாவுடனான அதிருப்தியும் அதிகமாகவே, அவரது அமமுக சோர்வு நிலையை சந்தித்தது.. ஆனால், பாஜக இப்படி அமமுக சீனியர்களுக்கு வலைவிரிப்பது தெரிந்ததுமே, பழைய ஃபார்முக்கு டிடிவி வந்தார் என்றால், இதற்கும் பாஜகதான் மறைமுக காரணம் என்கிறார்கள்.. இப்போது, அந்த பாஜகவையும் ஓவர்டேக் செய்து, 3வது அணியை வழிநடத்தி ரெடியாகி வருகிறாராம் தினகரன்..!












Click it and Unblock the Notifications