சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அஸ்வின் போல அதிரடி இன்னிங்ஸ்? வானிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அப்டேட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும், மழை பெய்யுமா என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் நேற்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகல் சென்னையில் தொடங்கிய மழை விட்டு விட்டு பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி கடந்த வாரம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் இன்று (25-12-2022) காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

சுத்துப்போட்ட கருமேகம்.. சென்னையில் பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழை.. இன்றைய வானிலை எப்படி? சுத்துப்போட்ட கருமேகம்.. சென்னையில் பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழை.. இன்றைய வானிலை எப்படி?

வானிலை

வானிலை

இது மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை. இது புயலாக மாற வாய்ப்பு கிடையாது. நிலப்பரப்பிற்கு அருகில் இருப்பதால் புயலாக மாறாமல் கரையை கடக்கும், இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே செல்ல உள்ளது. அதன்பின் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26-12-2022) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இதனால் தமிழ்நாடு பக்கம் அனுப்பப்பட்ட மேகங்கள் தமிழ்நாட்டிற்கு மழையை கொடுத்து வருகிறது.

மழை நிலவரம்

மழை நிலவரம்

தமிழ்நாட்டில் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், தமிழ்நாடு இந்த வடகிழக்கு பருவமழையை 25ம் தேதி 11.30 மணி வரை 961 மிமீ மழை பெய்துள்ளது. இன்னும் டார்கெட்டை அடைய 39 மிமீ மழைதான் தேவை. அஸ்வின் அடித்த இன்னிங்ஸ் போல இன்னொரு இன்னிங்ஸ் வடகிழக்கு பருவமழையை பெய்ய வாய்ப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த மழை பெய்யுமா என்று பார்க்க வேண்டும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

மழை அளவு

மழை அளவு

அவர் செய்துள்ள போஸ்டில், தமிழ்நாட்டில் 25ம் தேதி பெய்த மழையின் அளவு பின்வருமாறு ( மிமீ அளவில்)


சென்னை
----------

பாரிஸ் (ஆட்சியர் அலுவலகம்) - 52
தண்டைர்பேட்டை - 39
ராயபுரம் - 37
ராயப்பேட்டை - 35
தேனாம்பேட்டை - 35
கோடம்பாக்கம் - 31
திருவிக நகர் - 31
அமிஞ்சிக்கரை - 30
மீனம்பாக்கம் - 28
நுங்கம்பாக்கம் - 27
மத்திய (ரிப்பன் கட்டிடம்) - 27
சோழிங்கநல்லூர் - 26
கிண்டி (அண்ணா பல்கலைக்கழகம்) - 24
கே.கே.நகர் - 23
வளசரவாக்கம் - 23
மெரினா (டிஜிபி அலுவலகம்) - 23
அடையார் - 22
பெரம்பூர் - 21
அயனாவரம் - 20
அண்ணாநகர் மேற்கு - 20
பெருங்குடி - 20
ஆலந்தூர் - 20
தரமணி - 20
செங்கல்பட்டு

 மழை குறைவா?

மழை குறைவா?

வேறு மாவட்டங்கள் எதிலும் 20 மிமீக்கு அதிகமாக மழை பெய்யவில்லை. இன்று இரவும், நாளையும் மழை தென் தமிழ்நாட்டிற்கு செல்ல உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும். இங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டாவிலும் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் டிசம்பர் 28-ம் தேதி வரை மழை நீடிக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

English summary
Can we get a Ashwin like innings from the North East Monsoon? asks Tamil Nadu Weatherman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X