Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை துரோகம்".. வண்ணான் தொழிலை பிராமணன் செய்கிறானா.. மனுதர்மம்தான் எல்லாம்.. திருமாவளவன் ஆவேசம்

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் விசிக திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனுஸ்மிருதியில் உள்ளதைதானே எம்பி ஆ.ராசா பேசியிருக்கிறார்.. மனுஸ்மிருதி அடிப்படையில்தான் இங்கு இன்னமும் நடந்து வருகிறது என்று விசிக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.

திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

பைபிள்

பைபிள்

அப்போது, ஆ.ராசாவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினோம்.. "என்றைக்கோ இருந்ததை இப்போது எதுக்காக மனுஸ்மிருதியை ஆ.ராசா எடுத்து பேசுகிறார்? அந்த நடைமுறை இப்போது இல்லையே? அந்த புத்தகம்கூட இப்போது எங்குமே இல்லையே? ஆ.ராசா பேச்சு இந்த காலத்தில் தேவையா? என்றெல்லாம் பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்களே.. இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டோம்.. அதற்கு திருமாவளவன் தந்த பதில்தான் இவை

 பைபிள் + கிறிஸ்தவர்கள்

பைபிள் + கிறிஸ்தவர்கள்

எல்லாருடைய வீட்டிலும் பைபிள் இருக்கத்தான் செய்கிறது.. அதுக்காக எல்லாரும் பைபிள் படிக்கிறார்களா? யாராவது 10 கிறிஸ்தவர்களை அழைத்து, இந்த பைபிளை முழுமையாக படித்திருக்கிறீர்களா? என்று கேளுங்கள்.. உங்களுக்கு உண்மை விளங்கும்.. அதுபோலவே திருக்குறளும் எல்லார் வீட்டிலும் இருக்கும்.. அத்தனை குறளையும் படித்து முடித்திருப்பார்களா? அதனால், புத்தகத்தை வைத்து, பின்தொடர்கிறார்கள் என்று அர்த்தமில்லை.. இந்த இந்திய சமூக கட்டமைப்பு என்பது வெளிப்படையாக தெரியும்.. இன்னைக்கு இந்தியாவே 3 இந்தியாவாக உள்ளது..

 பறையர்

பறையர்

அக்ரஹார இந்தியா, ஊர் தெரு இந்தியா, சேரி இந்தியா என 3 இந்தியா இருக்கிறது.. இந்த வாழ்விடம் எப்படி உருவானது? எல்லாரும் ஒரே தெருவில் குடியிருக்க வேண்டியதுதானே? அக்ரஹாரத்தில், சக்கிலியரோ, பறையரோ, தேவேந்திர குல வேளாளரோ, குறவரோ ஏன் எல்லாரும் ஒன்னா இல்லை? இவர்களுக்கு ஏன் செட்டியார் தெருவில் வீடு இல்லை? நாயக்கர் தெருவில் வீடு இல்லை? ரெட்டியார் தெருவில் வீடு இல்லை? ஊர்தெருவில்கூட, தனித்தனியாகத்தான் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்..

 பிள்ளைமார்

பிள்ளைமார்

முதலியார், பிள்ளைமார், செட்டியார், நாடார், முக்குலத்தோர் என்று கலந்துகூட இருப்பதில்லை.. 50 வீடு இருக்கிறது என்றால் 50 வீடுகளுமே நாடார் வீடுகளாகத்தான் இருக்கும்.. 10 வீடு என்றால், 10 வீடுகளுமே அந்த ஒரே தெருவில்தான் இருக்கும்.. கோயிலைகூட , சுடுகாடுகூட, குளத்தைகூட, ஒவ்வொரு சமுதாயத்துக்காக பிரித்து வைத்திருக்கிறார்களே? இதெல்லாம் ஒரு கொள்கை, கோட்பாடு இல்லாமல் உருவாகியிருக்க முடியாது.. இதன் பின்னணியில் உள்ள அந்த கோட்பாடு எது என்று பார்த்தால், அதுதான் மனுதர்மம்.. இந்த மனுதர்மம்தான் நீண்ட காலத்துக்கு சட்டதிட்டமாக இருந்து வந்திருக்கிறது..

 CODE OF MANU

CODE OF MANU

புத்தர் காலத்திலும் இது இருந்திருக்கிறது.. அவரும் இதை எதிர்த்துள்ளார்.. அடிப்படையில் சனாதன எதிர்ப்பு போராளிதான் புத்தர்.. சுதந்திரம் + சமத்துவம் + சகோதரத்துவம் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.. அரசியலில் அண்ணன் - தம்பி என்று அழைத்து கொள்வார்கள்.. ஆனால், சமூக ரீதியாக சகோதரத்துவம் நிலவுகிறதா? பெண் கொடுக்கல் வாங்கல் இருக்கா? இந்த அளவுக்கு சமூக அமைப்பு உலகத்தில் எங்குமே இல்லை.. அதுதான் மனு சட்டம் என்பது.. Code of Manu என்பார்கள். திருமணங்களில் சாதி கலப்பு கூடாது என்கிறார்களே, மதக்கலப்பு கூடாது என்கிறார்களே, இவைகள் எல்லாமே மனுதர்மத்தை பின்பற்றக் கூடியவைதான்..

 பச்சை புளுகு

பச்சை புளுகு

புத்தகம் இல்லை என்கிறார்களே, இவ்வளவும் இங்கு வழக்கத்தில் உள்ளதே.. இதைதான் சுட்டிக்காட்டி பேசுகிறோம்.. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் வந்தபிறகு, மனுதர்மம் இல்லை என்கிறார்களே, இதைவிட பச்சை அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.. இங்கு எல்லாமே சாதியாகத்தானே உள்ளது? சாதியை தாண்டி இங்கு வேறு எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லையே? சாதியை கடந்து எந்த உறவு இங்கு தீர்மானிக்கப்படுகிறது? பச்சை புளுகு, பச்சை பொய் இதெல்லாம்.. எல்லாமே இங்கு சாதி அடிப்படையில்தான் கட்டமைக்கப்படுகிறது.. வெளியில் வந்து, மேடையில் ஏறி எவ்வளவும் முழங்கலாம்.. ஆனால், மறுபடியும் அவரவர் சாதிக்குள்ளேயே, அவரவர் சாதி குடும்பத்துக்குள்ளேயேதான் முடங்க வேண்டியதாக இருக்கிறது.. இது சமூக இயற்கை..

பார்லிமென்ட்ரி

பார்லிமென்ட்ரி

அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது என்கிறார்களே, இந்த அரசியலமைப்பு சட்டமானது, தேர்தல் மற்றும் நிர்வாகத்துக்கு மட்டும் மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள்.. பார்லிமென்ட்ரியை, சட்டசபையை உருவாக்க வைத்துள்ளது, சட்டம் இயற்றக்கூடிய முறைக்கு மட்டும்தான் அரசியமைப்பு சட்டம் பயன்படுகிறது.. மற்றபடி சமூக, கலாச்சார, பண்பாட்டுக்குள்ளே அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தப்படவில்லை.. காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை.. இந்தியாவை இன்றுவரை ஆட்சி செய்வது, மனுஸ்மிருதிதான்.. கலாச்சார, சமூக, பண்பாட்டு ரீதியாக அதைபயன்படுத்த வேண்டும் என்று சொல்வதுதான், சனாதன எதிர்ப்பு என்பது.

வண்ணான்

வண்ணான்

அந்த காலத்தை போல் இல்லை, இப்போது எல்லாம் மாறிவிட்டது, எல்லாரும் இங்கே சமம் என்று பேசுகிறார்களே? இன்னும் கிராமப்புறங்களில் வண்ணான் தொழிலை பிராமணன் செய்கிறானா? முடிவெட்டும் வேலையை சத்திரியன் செய்கிறானா? எந்த மார்வாடியாவது செய்கிறார்களா? சூத்திரர்கள் செய்யும் வேலையை, மற்ற வர்ணத்தை சேர்ந்தவர்கள் யார் செய்கிறார்கள்? எந்த பிராமணராவது நிலம் வாங்கி, ஏர் ஓட்டி விவசாயம் செய்கிறானா? களத்தில் உட்கார்ந்து மூட்டை தூக்கியிருக்கிறார்களா? மரம் வெட்டுகிறார்களா? தச்சு வேலை செய்கிறார்களா? வர்ணாசிரம தர்மம் இன்றும் நடைமுறையில் உள்ளது..

 பிராமண பெண்

பிராமண பெண்

எந்த பிராமண பெண்ணாவது, நாற்று நட்டிருக்கிறார்கள்? ஒரே சமுதாயத்தை மட்டும் நான் சொல்லவில்லை.. சத்திரிய குடும்பத்து பெண்கள் இதை செய்கிறார்களா? விவசாயம் செய்யக்கூடிய அத்தனை பேரும் சூத்திரர்கள்தான். இவர்கள்தான் உழைப்பவர்கள்.. உழைப்பவர்கள்தான் மூலம்.. உழைப்பு இல்லை என்றால் உற்பத்தி இல்லை. உதாரணத்துக்கு, ஒரு கணக்கு எழுது என்றால், அதற்கு சூத்திரம் (formula) சொல் என்பார்கள்.. ஃபார்முலா எழுதினால், கணக்குக்கு விடை தெரிந்துவிடும்.. அந்த அளவுக்கு மூலதாரிகள், மூலதார சக்திகள்தான் சூத்திரர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+