துணைவேந்தரின் விளக்கம் ஏற்புடையதல்ல.. பெரியார் பல்கலைக்கழக விவகாரத்தில் கடுகடுத்த ஓபிஎஸ்
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துணைவேந்தர் அளித்த விளக்கம் ஏற்புடையதல்ல. இதுபற்றி அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது.
முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில் 4 சாதி பிரிவுகளை குறிப்பிட்டு எது தாழ்த்தப்பட்ட சாதி? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் கூடாது எனக்கூறி போராடிய பெரியாரின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இத்தகைய செயல் நடந்துள்ளது வருத்தமளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஓ பன்னீர் செல்வம் கண்டனம்
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை முதலாம் ஆண்டு வரலாறு பருவத் தேர்வில் சாதி குறித்து வினா கேட்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து பல்ககை்கழக துணைவேந்தர் அளித்திருக்கும் விளக்கமும் ஏற்புடையதாக அல்ல. எனவே தமிழ்நாடு அரசு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.

துணைவேந்தர் கூறியது என்ன?
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், ‛‛முதுகலை வரலாறு 2 ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாவத்தாள் பிற பல்கலைக்கழ கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை'' என்றார்.

உயர்கல்வித்துறை நடவடிக்கை
மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த வினாத்தாள் விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை உயர் அலுவலரின் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். அந்தக் குழு அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications