அதிமுக அலுவலகம் சூறை..திருடு போனது என்ன? சி.வி. சண்முகத்திடம் சிபிசிஐடி போலீஸ் வாக்குமூலம்
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசியதில் கலவரமாக மாறியது. இதில் அதிமுக அலுவலகம் சேதமடைந்தது. பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

சி.வி. சண்முகம் புகார்
இது குறித்து இபிஎஸ் தரப்பில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்து இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் சிலவை திருடப்பட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அலுவலக மோதல் வழக்கு
இந்த வழக்கு விசாரணையின்போது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டில் கூடுதல் மனு
இதைத்தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் விசாரணையை தொடங்கவில்லை.பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கோரியிருந்தார்.

சிபிசிஐடி விசாரணை
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அலுவலக மேலாளர் விளக்கம்
இந்த விசாரணையைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரான மகாலிங்கத்திற்கு விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்கு ஆஜரானார். சிபிசிஐடி காவல்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பல்வேறு கேள்விகளை மகாலிங்கத்திடம் கேட்டு விளக்கம் பெற்றனர்.

சி.வி. சண்முகம் வாக்குமூலம்
ஏற்கனவே, புகார் மீதான விசரணையை சி.வி.சண்முகம் அவர்களிடம் நடத்தினர். தற்போது மீண்டும் ஒரு முறை விசாரணை செய்து, சி.வி.சண்முகத்திடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
மந்தையில் இருந்து பிரிந்த 3 ஆடுகள்..நொறுங்கிய அதிமுக! இனி விஜய்க்குதான் நல்ல காலம்! எப்படி தெரியுமா? -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications