தாது மணல் முறைகேடு.. விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் வீட்டில் இருந்த பீரோ.. ஆவணங்களை பறிமுதல் செய்த சிபிஐ
சென்னை: தாது மணல் முறைகேடு தொடர்பாக சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 8க்கும் அதிகமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் குவாரிகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், வைகுண்டராஜனின் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தாது மணல் முறைகேடு
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தாது மணல் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில். அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. அந்த சோதனைகளில் தாது மணம் முறைகேடு பெரியளவு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிஐ விசாரணை
இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாது மணல் ஆலை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாட, இதனைத் தொடர்ந்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டில் யார் யாருக்கு தொடபு உள்ளது என்பது குறித்து விரிவாக விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது.
சென்னையில் சிபிஐ சோதனை
இந்த நிலையில் தாது மணல் முறைகேடு தொடர்பாக சென்னையில் உள்ள 3 இடங்களிலும், நெல்லையில் 8 இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாது மணல் முறைகேடாக எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அலுவலகம், அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் ஹரி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
5 மணி நேரமாக ரெய்டு
அதேபோல் ஆல்பர்ட் தியேட்டர் அருகே ஜெகதீசன் என்பவர் அலுவலகம் மற்றும் சுகுமார் என்பவரின் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 5க்கும் அதிகமான இடங்களில் தாது மணம் முறைகேடு தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
வைகுண்டராஜன் வீட்டில் ரெய்டு
குறிப்பாக தாது மணல் முறைகேடு தொடர்பாக விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் குறி வைத்து இந்த சோதனை நடப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் வைகுண்டராஜனின் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளி வந்துள்ளது.
பீரோ நிறைய ஆவணங்கள் பறிமுதல்
விவி மினரல்ஸ் தொடர்புடைய இடங்களில் செய்யப்பட்ட இடங்களில் கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள் உள்ள ஒரு பீரோவை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிபிஐ சோதனை முடிவில், கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications