சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில்..சிமெண்ட் பூச்சு வேலை மோசம்..புட்டு,புட்டு வைத்த ஐஐடி குழு

Google Oneindia Tamil News

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன என்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து மோசமான நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

மிஸ்டர் சீமான்! சைவம், வைணம்தான் தமிழர் மதமா? சங்ககால சமணம், புத்தம், ஆசீவகம் எல்லாம்?-பேரா.அருணன்மிஸ்டர் சீமான்! சைவம், வைணம்தான் தமிழர் மதமா? சங்ககால சமணம், புத்தம், ஆசீவகம் எல்லாம்?-பேரா.அருணன்

 மோசமான நிலையில் கட்டிடம்

மோசமான நிலையில் கட்டிடம்

மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பு கட்டிடத்தை குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது.

சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு

சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழு

இதன்பின்னர் சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய க்யூப் என்ற நிறுவனத்திலிருந்து 10 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தை ஆய்வு செய்தனர். கடந்த மாதம் 15-ம் தேதி க்யூப் நிறுவன குழுவினர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வுட மேம்பாட்டு வாரியத்திடம் முதற்கட்ட அறிக்கையை சமர்பித்தனர். கடந்த 4-ம் தேதி இந்த குழுவினர் இறுதி அறிக்கையை சமர்பித்தனர்.

சிமெண்ட் பூச்சு வேலை மோசம்

சிமெண்ட் பூச்சு வேலை மோசம்

இந்த நிலையில் ஐ.ஐ.டி.யுடன் தொடர்புடைய க்யூப் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள விவரங்கள் தெரியவந்துள்ளது. அதாவது சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு வேலை மோசமாக உள்ளது என்று ஐ.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. க்யூப் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் கட்டிடத்தின் தேவையான சிமெண்டின் அளவு 70% குறைவாக இருந்ததாக அறிக்கையில் கூறி இருக்கிறது.

டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படவில்லை

டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படவில்லை

மேலும் இந்த அறிக்கையில் ஐ.ஐ.டி கூறியிருப்பதாவது:- கே.பி.பார்க் குடியிருப்பில் டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படவில்லை. பம்ப் மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சாதனங்களிலும் குறைபாடு உள்ளது. டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படாததால் சுவர்கள் எளிதில் தண்ணீரை உறிஞ்சி வலுவிழந்து விடலாம்.

பராமரிப்பு பணிகள்

பராமரிப்பு பணிகள்

சரியான கால இடைவெளியில் கட்டத்திற்கு தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். கட்டடத்தை எப்படி பராமரிப்பது? என்பது குறித்து அங்கு வசிக்கும் மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The cement coating work of the KP Park building in Puliyanthope, Chennai is in poor condition, according to a report submitted by IIT. The report states that the amount of cement required for the building was less than 70% of the samples examined by Cube
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X