Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க மார்கெட்டின் குடுமியே "இவங்க" கிட்ட தான்! விலையை முடிவு செய்வது யார்! ஆனந்த் சீனிவாசன் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதல் உயர்ந்த தங்கம் விலை இப்போது தான் ஓரளவுக்கு நிலையாக நிற்கிறது. இருப்பினும், தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா இல்லை அதிகரிக்குமா என்ற சந்தேகம் இப்போதும் மக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர உண்மையில் என்ன காரணம் என்பதைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் உயர ஆரம்பித்த தங்கம் விலை அதன் பிறகு நிற்கவே இல்லை. பிரேக் போடாமல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தே வந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை ஓரளவுக்குச் சீராக இருக்கிறது. தங்கம் விலை இந்தளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் உயர்ந்து யாருமே பார்த்தது இல்லை.

Anand Srinivasan gold

ஆனந்த் சீனிவாசன்

இதனால் பொதுமக்களுக்குத் தங்கம் விலை இப்படி உயர என்ன காரணம் என்பது புரியாமல் இருக்கிறது. மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பிக்குமா என்ற அச்சமும் பொதுமக்களிடையே அதிகம் இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வதற்கான காரணத்தைப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

மத்திய வங்கிகள்

அதாவது தங்கம் விலை சாதாரணப் பொதுமக்கள் வாங்குவதால் பெரியளவில் உயராது எனக் குறிப்பிட்டுள்ள ஆனந்த் சீனிவாசன், சர்வதேச நாடுகள் தங்கத்தை வாங்கு குவிப்பதாலேயே அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை வாங்குவதே அதன் விலை ஏற்றத்திற்குக் காரணம் என அவர் சொல்லியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "1991ல் இருந்து 2016 வரை (டாலர் மார்கெட்டில்) தங்கம் விலை பெரிதாக ஏறவே இல்லை. 1991ம் ஆண்டு ஒரு அவுன்ஸ் தங்கம் 200 டாலர் இருந்தது. 2015ல் தான் அது 1000 டாலரை தொட்டது. அதாவது வெறும் 5 மடங்கு உயர 24 ஆண்டுகள் ஆனது. 2008ம் ஆண்டு கூட பொருளாதாரக் குழப்பத்தால் தான் அது 700 டாலர் போனது. இல்லை என்றால் அப்போதும் 200 டாலரிலேயே தான் இருந்திருக்கும். அப்போதும் கூட அந்தக் குழப்பம் முடிந்த உடனேயே தங்கம் விலை குறைந்தது. ஒரு முறை மட்டும் 1200க்கு போய் திரும்பிக் குறைந்தது.

சீனா, டிரம்ப்

இப்போது சீனாவின் வளர்ச்சி மற்றும் அமெரிக்கா பலவீனமாக இருப்பதால் தான் தங்கம் விலை உயர்கிறது. இந்த குழப்பங்கள் எதுவும் இல்லை என்றால் தங்கம் விலை மீண்டும் 1800 டாலருக்கு வந்துவிடும். ஒரு பக்கம் டிரம்ப்.. இன்னொரு பக்கம் சீனா என இருவரும் இருக்கிறார்கள். அதன் மோதல் போக்கே தங்கம் விலையை உயர்த்துகிறது.

மேலும், டிரம்ப் அமெரிக்க பெடரல் வங்கி உடனும் மோதல் போக்கைக் கொண்டிருக்கிறார். நாளையே அவர் பெடரல் வங்கியின் செயல்பாடுகளில் நான் தலையிட மாட்டேன்.. பெடரல் வங்கி அவர்கள் வேலையைச் செய்வார்கள். தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஜெரோம் பவுலுக்கு பதவி நீடிப்பை வழங்கப் போகிறேன் எனச் சொன்னால் தங்கம் உடனே 3000 டாலருக்கு வந்துவிடும்" என்றார்.

உலக நாடுகள்

அதாவது உலக நாடுகள் தங்கத்தை வாங்காமல் இருந்தபோது அதன் விலை பெரியளவில் உயராமலேயே இருந்துள்ளது. ஆனால், உக்ரைன் போருக்குப் பிறகு உலக நாடுகள் தங்கத்தை வாங்க ஆரம்பித்த பிறகே அதன் விலை தாறுமாறாக உயர ஆரம்பித்தாக அவர் குறிப்பிடுகிறார். மேலும், டிரம்ப் அமெரிக்க மத்திய வங்கி செயல்பாடுகளில் தலையிடவில்லை என்றாலும் தங்கம் விலை குறையும் என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+