Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிஎஸ்டி சாலையில் முதலை?? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி சாலையில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Recommended Video

    அது முதலை அல்ல, மரக்கட்டை - Chengalpattu Collector விளக்கம் | Oneidia Tamil

    தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலம் முழு கனமழை பெய்து வருகிறது.

    கடந்த அக். 26ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    தலைநகர் சென்னை

    தலைநகர் சென்னை

    குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முதலில் நவம்பர் தொடக்கத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததது. பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ள நீரை முழுமையாக வெளியேற்றி, இதில் இருந்து மீண்டு வரவே சில நாட்கள் வரை ஆனது.

    1000 மி.மீ மழை

    1000 மி.மீ மழை

    தலைநகர் சென்னையில் இந்த மாதம் மட்டும் 1000 மி.மீ மழை பதிவானதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் தலைநகர் சென்னையில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இது 4ஆவது முறையாகும். இதற்கு முன் 1918 நவம்பர் (1088 மிமீ), 2005 அக்டோபர் (1078 மிமீ), 2015 நவம்பர் (1049 மிமீ), ஆகிய ஆண்டுகளில்ல மட்டுமே 1000 மி.மீ மழை பதிவானது.

    முதல்வர் ஆய்வு

    முதல்வர் ஆய்வு

    இந்தச் சூழலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

    ஜிஎஸ்டி சாலையில் முதலை?

    ஜிஎஸ்டி சாலையில் முதலை?

    மேலும், ததைலநகர் சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வெள்ளம் போல பாய்கிறது. இந்தச் சூழலில் செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களும் பகிரப்பட்டது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

    மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    இந்நிலையில் முதலை பரவியதாக வெளியான தகவல் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் (ஜிஎஸ்டி சாலை) வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாகச் சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் "ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்து சென்றுள்ளது. அதைத் தான் முதலை எனச் சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+