செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை..நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பீதியில் உறைந்த மக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக். இவர்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல்நிலையம் எதிரே உள்ள டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்திறங்கியது. அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கார்த்திகை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும்,. கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்

தலையை சிதைத்துவிட்டு சென்றனர்
இதில் படுகாயம் அடைந்த காத்திக் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அந்த கும்பல் கார்த்திக்கின் தலையை உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு அங்கு இருந்து தப்பி ஒடி விட்டது. இதேபோல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் மகேஷ்( 22) . மகேஷ் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

இன்னொரு கொலை
அப்போது கார்த்திகை கொலை செய்து விட்டு தப்பிய அதே கும்பல் அங்கு வந்துள்ளது. மகேஷையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒட்டி விட்டது. படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த இரண்டு கொலைகள் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மர்ம கும்பல் யார்?
இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நடந்த இந்த இரண்டு இடமும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகும். மர்ம கும்பல் துணிச்சலாக வந்து இந்த கொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகிறது.

பீதியில் உறைந்த மக்கள்
இந்த கொலை எதனால் நடந்தது? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்த 2 பேர் படுகொலை செய்யப்பட்டதால் செங்கல்பட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications