சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர், அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து மாற்றம்- முழு விபரம்
சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகில் இன்று முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பு அருகில் இன்று முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் இன்று அமல்படுத்தப்படுகிறது.
வாகன நெரிசல் அதிகமான நேரங்களில் காலை மற்றும் மாலை ஸ்பென்சா் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். டவர் கிளாக் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்பட்டு லாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்களும் ரேமண்ட்ஸ் துணிக்கடை எதிரில் U திருப்பம் செய்து செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதனால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம்.
பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டு , அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் இன்று அமல்படுத்தப்படுகிறது.
பழைய மாமல்லபுரம் சாலை இந்திரா நகா் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள், ராஜீவ்காந்தி சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, சா்தாா் பட்டேல் சாலையை சென்று காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் U திருப்பத்தில் திரும்பி மீண்டும் சா்தாா் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடையலாம்.
அங்கிருந்து அவரவா் இலக்கை அடையலாம் அல்லது பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகா் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகா் 2-ஆவது அவென்யூ (வாட்டா் டேங்க் சாலை) இந்திரா நகா் 1-ஆவது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையை அடையலாம்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications