மாம்பழம் சின்னம்.. பாமக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்புக்கு சென்னை உரிமையியல் உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பாமக இரண்டு அணியாக தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு மாழ்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து, அதற்கான கடிதத்தை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பாமக தலைவர் என குறிப்பிட்டு தி.நகர் அலுவலகத்துக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண இரு தரப்புக்கும் உத்தரவிட்டது. இதற்கிடையே பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு இன்று (பிப்ரவரி 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின்படி, பாமக கட்சி தலைவராக ராமதாஸ் தான் உள்ளார். அதனால், அன்புமணி ராமதாஸ் தலைவர் என்று கூற தடை விதிக்க வேண்டும். மேலும், மாம்பழம் சின்னத்தையும், பாமக கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் பயன்படுத்த அன்புமணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் அன்புமணி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications