ஜமீன் நன்கொடை சொத்தா.. முழு உரிமை இல்லை! சென்னை நிலம் அரசுக்கே சொந்தம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள 2 ஏக்கர் 36 சென்ட் நிலம் அரசுக்கு சொந்தமானதுதான் என்றும் தனியாருக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
அடையாறு கிரீன்வேஸ் சாலையில் சிவகிரி ஜமீனுக்கு சொந்தமாக ஒரு இடம் இருந்துள்ளது. தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின்படி ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டு ரயத்வாரி முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி கிரீன்வேஸ் சாலையில் உள்ள 2 ஏக்கர் 36 சென்ட் நிலம் சிவகிரி ஜமீனிடம் வேலைபார்த்த திருமலை என்பவருக்கு 1912ல் எழுதி தரப்பட்டது.

இந்த நிலத்தில் தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிலத்திற்கு கடந்த 1956 சென்னை கலெக்டரின் துணை செயலாளர் வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் திருவண்ணாமலை செட்டில்மெண்ட் அதிகாரி பட்டா வழங்கினார்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்று மைலாப்பூர் தாசில்தார் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, அந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பும் பணி தொடங்கியது. இதை எதிர்த்து சென்னை சிவில் நீதிமன்றத்தில் கட்டிக்குப்பத்தை சேர்ந்த சரோஜா என்பவர் கடந்த 2008ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை 16வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எஸ்.ஷாஜகான் ஆஜராகி, மனுதாரர் தனது தாத்தா திருமலைக்கு சிவகிரி ஜமீன் எழுதி கொடுத்ததாக உரிமை கோரும் இடம் தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு சொந்தமானது. மனுதாரர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து அரசு நிலத்திற்கு உரிமை கொண்டாடுகிறார்.
இந்த இடத்தை சுற்றி அடையாறு பூங்கா அறக்கட்டளை சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளது. அரசு நிலத்திற்கு எந்த தனி நபரும் உரிமை கோர முடியாது. மனுதாரரின் முன்னோர்களுக்கு இந்த நிலத்திற்கான பட்டா வழங்கியதில் சம்மந்தப்பட்ட அதிகாரி உரிய கவனத்தை செலுத்தவில்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சி.அசோக்குமார், சொத்துக்கு உரிமை கோரி மனுதாரர் வழக்கு தொடரலாம். அந்த உரிமை கிடைத்தவுடன் சம்மந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரியிடம் பட்டா கோரலாம். ஆனால், மனுதாரர் சொத்தின் உரிமையை பெறாமல் நேரடியாக சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது தாத்தா திருமலைக்கு சிவகிரி ஜமீன்தார் ராமலிங்க பாண்டிய சின்ன தம்பியார் செட்டில்மென்ட் ஒப்பந்தம் எழுதி கொடுத்ததாக கூறியுள்ளார். அந்த செட்டில்மென்ட் ஒப்பந்தத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரர் இந்த நிலத்திற்கு உரிமை கோர எந்த முகாந்திரமும் இல்லை.
இனாம் சொத்து நன்கொடையாக கொடுக்கப்படுவது, அதை பெறுபவருக்கு அந்த சொத்தின் மீது முழு உரிமை கிடையாது. அதன் அடிப்படையில் நன்கொடையாக பெற்ற சொத்துக்களுக்கு செட்டில்மெண்ட் பட்டா வழங்கப்படவில்லை. மனுதாரர் இந்த நிலம் இனாம் சொத்து இல்லை என்றும் தங்களுக்கு எழுதி தரப்பட்டது என்றும் கோரியுள்ளார்.
வருவாய் ஆவணங்களில் சொத்து குறித்த பதிவு இருக்க வேண்டுமே தவிர வருவாய் அதிகாரிகள் தரும் சான்றிதழ்களை வைத்து உரிமை கோர முடியாது. இந்த வழக்கில் நிலத்திற்கான உரிமை குறித்து மனுதாரர் நிரூபிக்கவில்லை. மனுதாரரின் கட்டுப்பாட்டில் இந்த நிலம் இல்லை. தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் பூங்கா மட்டும் இந்த நிலத்தில் உள்ளன. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications