இன்று இரவுக்குள் எல்லாம் சரியாகும்.. சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: மழை வெள்ளம் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்புகள் அனைத்தும் இன்று இரவுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் சென்னை மற்றும் தமிழகத்தில் மின்சார விபத்து உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
சென்னை பெரம்பூர் அடுத்த பெரியார் நகரில் உள்ள துணை மின் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

செந்தில் பாலாஜி பேட்டி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையத்திலும் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. 12200 மின் நுகர்வோர்க்கு மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7500 மின் நுகர்வோருக்கு இன்று காலை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 4680 மின் இணைப்பு தாரர்களுக்கு மின் இணைப்பு இன்று மாலைக்குள் வழங்கப்படும்.

புகார்கள்
44 லட்சம் மின் நுகர்வோர் சென்னையில் உள்ளனர். மின்னகம் பொறுத்த வரை 2419 புகார்கள் பெறப்பட்டு, சென்னையை பொறுத்தவரை 1748 புகார்கள் பெறப்பட்டு 606 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்னகத்தின் இதுவரை 4,55, 000 புகார்கள் பெறப்பட்டு 4,44,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 11000 புகார்கள் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 98% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
பருவ மழை தொடர்ந்தாலும் சீரான மின்சார விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடந்த கால மழை காலத்தில் மின் விநியோகத்தில் வந்த புகாரை விட தற்போது விநியோகம் தொடர்பாக வந்த புகார்கள் குறைவு.

மின் நுகர்வு
மழை நீரால் சூழ்ந்துள்ள துணை மின் நிலையங்கள் கணக்கெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டிற்குள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மழை காரணமாக மின் நுகர்வு குறைந்து உள்ளது, தமிழகத்தில் 14000 மெகாவாட் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று 11000 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மின்விபத்துகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications