சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறந்த சென்னை மாநகராட்சி ஊழியருக்கு ரூ 7 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சாக்கடை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த சென்னை மாநகராட்சி ஊழியருக்கு 7லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா நகரில் கடந்த 2013-ம் ஆண்டு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும்போது சம்பவ இடத்திலேயே ஜனார்த்தனன் என்பவர் உயிரிழந்தார் அந்த மரணம் தொடர்பாக இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை நடராஜன் என்பவர் தொழிலாளர் நலவாரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Chennai HC orders to give Rs 7 lakh as compensation for Municipal worker

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தொழிலாளர் நல வாரியம் நீதிமன்றம் 7 லட்சத்து 13 ஆயிரத்து 960 ரூபாய் மற்றும் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சென்ன உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உயிரிழந்த ஜனார்த்தனன் சென்னை மாநகராட்சி ஊழியர் இல்லை என்றும் சென்னை குடிநீர் வாரிய ஊழியர் எனவே மாநகராட்சி அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலவாரியம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சுங்க சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு மட்டும் சலுகை வழங்குவதை எதிர்த்து வழக்குசுங்க சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு மட்டும் சலுகை வழங்குவதை எதிர்த்து வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இறந்துபோன ஜனார்த்தனன் என்பவர் சாக்கடையை சுத்தம் செய்யும் போது இறந்து விட்டார். அவர் சென்னை மாநகராட்சி ஊழியர் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர் நல வாரியம் பிறப்பித்த உத்தரவின்படி அவருக்கு சுமார் 7 லட்சத்து 13ஆயிரத்தை , 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

English summary
Chennai HC orders labour welfare department to give compensation as Rs 7 lakhs for demised Sanitary worker who died in 2013.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X