சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுபஸ்ரீ வழக்கிலும், சுஜித் வழக்கிலும் உயிர் பலிக்கு பிறகுதான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா?.. நீதிபதி

Google Oneindia Tamil News

Recommended Video

    RIP Sujith | சிதிலமடைந்து மீட்கப்பட்ட உடல்.. சுஜித் பிரேத பரிசோதனை சொல்வது என்ன?-வீடியோ

    சென்னை: ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி தேவைப்படுகிறதா என உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

    ஆழ்துளை கிணற்றில் சிக்கி சுர்ஜித் மரணம் தொடர்பாக அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரி மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷ்சாயி அமர்வு விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள், சுஜித் மீட்பதை தொடர்ந்து பிரேக்கிங் செய்தியாக ஒளிப்பரப்பிய ஊடகங்கள் ஏன் ஆழ்துளை கிணறு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக இதுவரை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இது பொறுப்பின்மை இல்லையா?

    சுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தைசுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை

    சினிமாத்தனம்

    சினிமாத்தனம்

    பிரேக்கிங் செய்திகளால் பரபரப்பு தான் ஏற்படுத்தப்பட்டது. உயிரை காப்பாற்ற முடியவில்லை. இசையுடன், சினிமா தனமாக இத்தகைய சம்பவங்களை ஒளிப்பரப்பியது வேதனை அளிக்கிறது. நம் வீட்டில் இது போன்ற நிலை ஏற்பட்டால் இது போன்று செய்தி வெளியிட அனுமதிப்போமா என்பதை உணர்ந்து ஊடகங்கள் செயல்ப்பட வேண்டும்.

    பொறுப்புணர்வு

    பொறுப்புணர்வு

    ஆழ்துளை கிணறு விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வரிச் செய்தியாவது போட வேண்டாமா? ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். இறந்த பிறகு தான் பொறுப்புணர்வு, விழிப்புணர்வை நாம் பேசிகிறோம்.

    சுஜித் வழக்கு

    சுஜித் வழக்கு

    சுபஸ்ரீ வழக்கிலும், சுஜித் வழக்கிலும் இறந்த உடல்களை பார்த்த பின்னர் பொறுப்புணர்வை உணர்கிறோம். ஆழ்துளை கிணறுகள் குறித்து உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம், சட்டமன்றம் பல முன்னெச்சரிக்கை உத்தரவுகளை பிறப்பித்தாலும் சமுதாயத்தில் ஆள்துளை கிணற்றில் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    எல்லா தொழில்நுட்பங்கள், வல்லுனர்கள் இருந்தும் சுஜித்தை காப்பாற்ற முடியாதது துரதிருஷ்டவசமானது. ஊடகங்கள் இந்த செய்தி முடிந்ததும் அடுத்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுவார்கள், நீதிமன்றமும் அடுத்த வழக்கு விசாரணைக்கு சென்று விடும், சமுதாயமும் அந்த போக்கில் சென்று விடும். ஆனால் இத்தகைய அலட்சிய உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    ஆழ்துளை கிணறு

    ஆழ்துளை கிணறு

    இதற்கு என்ன தீர்வு என்பதை தான் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். தமிழக அரசு கடந்த 2015 ம் ஆண்டு உருவாக்கிய ஆழ்துளை கிணறு பராமரிப்பு தொடர்பான சட்ட திருத்தம் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு உள்ளதா?

    தோண்டப்பட்டுள்ளதா

    தோண்டப்பட்டுள்ளதா

    ஆழ்துளை வைத்திருக்கும் நில உரிமையாளர்கள், கிராம நிர்வாகத்திடம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக தகவல்களை வழங்க இருக்கிறார்களா? முன் அனுமதி பெற்று தான் ஆழ்துளை தோண்டப்பட்டுள்ளதா?

    அரசு வேலை

    அரசு வேலை

    அலட்சிய உயிரிழப்புக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கினால் மட்டும் இந்த நிலைமைகள் சரியாகி விடுமா? ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்ப்பட்டால் மட்டுமே சமூதாயத்தில் இத்தகைய மோசமான நிலைமைகள் மாறும். எத்தனை போர்வெல் அனுமதி தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது?

    எத்தனை கிணறுகள்

    எத்தனை கிணறுகள்

    அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை? இதன் மீது எடுக்க சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தமிழக அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    English summary
    Chennai HC judges asks Tamilnadu Government that each and every amendment will be implemented only after people's lives loss?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X