சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- வேதாந்தா மனு டிஸ்மிஸ்: சென்னை உயர்நீதிமன்றம்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது; ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கூறி வேதாந்தா குழுமத்தின் மனுவை டிஸ்மிஸ் செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Recommended Video

    Sterlite ஆலையை மீண்டும் திறக்க கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

    1993ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அடுத்த ஓராண்டில், அதாவது 1994ல் தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    ஆலை அமைந்த பின், அப்பகுதியில் வசித்தவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ல் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி 1998ல் நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    ரத்னகிரி டூ தூத்துக்குடி.. 13 தமிழரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு.. ஸ்டெர்லைட் வழக்கின் பின்னணி!ரத்னகிரி டூ தூத்துக்குடி.. 13 தமிழரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு.. ஸ்டெர்லைட் வழக்கின் பின்னணி!

    நீதிமன்ற உத்தரவுகள்

    நீதிமன்ற உத்தரவுகள்

    1998 நவம்பரில் முதன் முதலாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம், ஆலை இயங்க அனுமதித்தது. 2010 செப்டம்பரில் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

    ரு100 கோடி இழப்பீடு

    ரு100 கோடி இழப்பீடு

    அடுத்த மூன்று நாட்களில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2013 மார்ச்சில் விஷ வாயு கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஏற்படுத்திய மாசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் இழப்பீடாகவும் 100 கோடி ரூபாயை வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் 2013 ஏப்ரலில் உத்தரவிட்டது.

    துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி

    துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி

    2018 மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.

    தேசிய பசுமை தீர்ப்பாயம்

    தேசிய பசுமை தீர்ப்பாயம்

    அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

    ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

    ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு

    2019 பிப்ரவரி 27 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8 ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய பெஞ்ச் இன்று காலை தீர்ப்பளித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும்; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்து

    English summary
    The Chennai High Court will give its verdict tomorrow in the case filed by Vedanta against the order issued by the Tamil Nadu government to close the Sterlite plant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X