சுத்துப்போட்ட கருமேகம்.. சென்னையில் பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழை.. இன்றைய வானிலை எப்படி?
சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் அலுவலக பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்ப சிரமப்பட்டனர். சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்றவர்கள் மழையில் நனையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அடுத்த சில மணிநேரம் சென்னையின் சில இடங்களில் மழை பெய்ய உள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்த பிறகு மழை அளவு என்பது குறைந்தது.
இருப்பினும் அவ்வப்போது மட்டும் லேசாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் மிதமான மழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிலவரப்படி, நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் கிழக்கில் நிலைகொண்டிருந்தது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

சென்னையில் நல்ல மழை
அதன்படி சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பல இடங்களில் நல்ல மழை பெய்தது. அதன்படி சென்னை கிண்டி, ஆலந்தூர், மெரினா கடற்கரை, தி நகர், ராயப்பேட்டை, விமான நிலையம், ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, நூங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் சைதாப்பேட்டை, அடையாறு, பிராட்வே, திருவன்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், வண்டலூர், பெங்களத்தூர், பெரம்பூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது.

சிரமப்பட்ட மக்கள்
இந்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். யாரும் எதிர்பாராத வகையில் பெய்த இந்த மழையால் நேற்று அலுவலக பணிகளை முடித்து வீடு திரும்பியவர்கள் சிரமப்பட்டனர். அதோடு சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டடத்துக்கு புறப்பட்ட மக்கள் மழையில் நனையும் நிலை ஏற்பட்டது.

அடுத்த 3 மணிநேரம் மழை
மேலும் இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி அடுத்த 3 மணிநேரத்துக்குள் சென்னை குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மிதமான மழையும், அமைந்தகரை, அயனாவரம், குன்றத்தூர், மதுரவாயல், பூவிரந்தவல்லி, மாதவரம், எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications