சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாத கனமழை! நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்கள்! வாக்கி டாக்கியுடன் களமிறங்கிய சென்னை மேயர் பிரியா!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பல இடங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நள்ளிரவிலும் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, சென்னை, செங்கலபட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் கனமழை வெளுத்து வாங்கியது.

அண்ணாமலையை போலவே ஆளுநர் பேசுகிறார்! 40 வீரர்கள் மரணத்துக்கு மோடி துணை போனாரா? ஆவேசமான கேஎஸ் அழகிரி அண்ணாமலையை போலவே ஆளுநர் பேசுகிறார்! 40 வீரர்கள் மரணத்துக்கு மோடி துணை போனாரா? ஆவேசமான கேஎஸ் அழகிரி

சென்னை கனமழை

சென்னை கனமழை

மேலும் நந்தனம், கேகே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி காட்சியளித்தது. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கியது.

தண்ணீர் தேங்கியது

தண்ணீர் தேங்கியது

இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை நகரின் தாழ்வான பகுதிகளை கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் நள்ளிரவு என்றும் பாராமல் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரிகளுடன் மழை நீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு நடத்தினார்.

மேயர் பிரியா

மேயர் பிரியா

தொடர்ந்து வாக்கி டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சில இடங்களில் மழைநீரை அகற்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், அந்தந்த பகுதி மண்டல அதிகாரிகளை அழைத்து இரவோடு இரவாக மழைநீரை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மழை கோட் அணிந்தபடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

நள்ளிரவில் ஆய்வு

நள்ளிரவில் ஆய்வு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பல இடங்களில் மழை நீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கும் நிலையில் அதனையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நள்ளிரவு என்றும் பாராமல் மேயர் பிரியா களத்தில் இறங்கி பணியாற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

English summary
Mayor of Chennai Corporation Priya also conducted a midnight survey on the measures being taken to clear out the stagnant rain water in many places after heavy rain fell till midnight in Chennai and its suburbs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X