இனி ஈஸி.. சென்னை மெட்ரோவில் மாணவர்கள்-ஐடி ஊழியர்கள் எளிதாக பயணிக்க பஸ்கள் இயக்கம்.. புதிய திட்டம்
சென்னை: சென்னையில் மாணவர்கள், ஐடி ஊழியர்கள் எளிதாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காரணம் வகையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் 2 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக பிற இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் பயண நேரம் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்
தற்போதைய சூழலில் சென்னையில் முதல் வழித்தடத்தில் விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமும் 2.20 லட்சம் பேர் பயணம்
இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு எஸ்டேட், கிண்டி, லிட்டில் மவுண்ட், ஷெனாய் நகர், ஆலந்தூர், திருவொற்றியூர், கோயம்பேடு மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட நிலையங்களை இணைக்கும் வகையில் மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் சென்னையில் வார நாட்களில் தினமும் 2.15 லட்சம் முதல் 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

புதிய திட்டம்
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பிற இடங்களுடன் நேரடியாக இணைக்க வேண்டி உள்ளது. இதற்காக பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் இயக்குவது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. '' என்றார்.

அதிகாரி கூறுவது என்ன?
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களை பிற இடங்களுடன் நேரிடையாக இணைக்க வேண்டி உள்ளது. இதற்காக பஸ்கள் இயக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பஸ்கள் இயக்குவது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களுடன் பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. '' என்றார்.

வருமா சேர் கார் வசதி?
இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் சேவையின் துவக்கத்தில் சேர் கார்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் குறைந்த செலவில் மெட்ரோ ரயில் பயணிகள் குறைந்த விலையில் வேகமாக பயணம் செய்தனர். தற்போது இது செயல்பாட்டில் இல்லை. இதனால் அந்த சேவையையும் நடைமுறைக்கு கொண்டு வர பிற நிறுவனங்களுடன் பேச வேண்டும் என மெட்ரோ பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications