ஆழ்வார்பேட்டை வீடு..ஆண்டவருக்கு பறந்த மெட்ரோ நோட்டீஸ்.. கேப்டன் மண்டபம் கண்ணு முன்னாடி வந்து போகுதே!
சென்னை : மெட்ரோ ரயில் பணிகளுக்காக நடிகர் கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் 170 சதுர அடி நிலம் தேவைப்படுவதாகவும் நிலம் கையகப்படுத்துவது குறித்து மெட்ரோ நிறுவனம் சார்பில் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.
வானுயர்ந்த மேம்பாலங்கள் மின்சார ரயில் பேருந்துகள் என இருந்தும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியவில்லை இதனை அடுத்து மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில்
இந்நிலையில் தலைநகர் சென்னையில் இரண்டாம் கட்டமாக சுமார் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பயணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைவதோடு பயணிகள் மிக வேகமாக பயணிக்க முடியும் என மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும்

நிலம் கையகப்படுத்தும் பணி
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வார்பேட்டை வழியாக மெட்ரோ ரயில் பாலம் செல்கிறது. இதற்காக அவ்வழியில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆழ்வார்பேட்டை சாலையில் உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.

கமலுக்கு நோட்டீஸ்
தற்போது மக்கள் நீதி மைய்யம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகம் போல செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் சுமார் 170 சதுர அடி மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்திலிருந்து 8 முதல் 10 அடி வரையிலான நிலத்தை தங்களுக்கு வழங்கும் படி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெரும் பரபரப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது கோயம்பேட்டில் மேம்பால பணிகளுக்காக இருந்த அவரது திருமண மண்டபத்தில் சில பகுதிகள் இடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications