இனி ஒரே டிக்கெட் போதும்! சென்னையில் மெட்ரோ, பஸ், புறநகர் ரயிலில் ஈஸியா பயணிக்கலாம்..செயலி அறிமுகம்
சென்னை: சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் பொதுமக்கள் ஒரே டிக்கெட்டில் பயணிக்க வசதியாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே டிக்கெட்டில் பொதுமக்கள் 3 வகை போக்குவரத்து சேவைகளையும் ஈஸியாக பயன்படுத்த முடியும்.
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மாநகர பஸ், மெட்ரா, புறநகர் ரயில்களில் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு (டிக்கெட்) எடுத்து பயணித்து வருகின்றனர்.
இதனை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 3 பயண சேவைகளுக்கும் ஒரே வகையான பயணச்சீட்டு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சென்னை நந்தனத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழும கூட்டம் நடந்தது. 2010ல் இந்த குழுமம் தோற்றுவிக்கப்பட்டாலும் கூட நேற்று முன்தினம் தான் முதல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மெட்ரோ, புறநகர் ரயில், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சென்னை நகர போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒரே டிக்கெட் திட்டத்துக்கு ஒப்புதல்
குறிப்பாக சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் என அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள், வசதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே பயணச்சீட்டு முறையை அமல்படுத்த சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செயலி அறிமுகம்
இதன்மூலம் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான டிக்கெட்டை பெற புதிதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க முடியும்.

நடைமுறை என்ன?
உதாரணமாக ஒருவர் வீட்டில் இருந்து குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் புறப்படும் இடம், செல்லும் இடத்தை குறிப்பிட வேண்டும். அதன்பிறகு எத்தனை வகையான போக்குவரத்து முறையை பயன்படுத்த போகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒருவர் மாநகர பஸ், மெட்ரோ, புறநகர் ரயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் 3 போக்குவரத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்தால் அதற்கான டிக்கெட் கட்டணம் காட்டும். அதனை செலுத்தி மாநகர அரசு பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் தனித்தனி டிக்கெட்டுகள் இன்றி ஒரே பயணசீட்டில் பயணிக்க முடியும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக தரத்தில் போக்குவரத்து முறை
மேலும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். சென்னை நகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டு பெருக்க வேண்டும். இதற்காக புதிய தொழில் நுட்பங்களை முடிந்த அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டும். உலக தரம் வாய்ந்த போக்குவரத்து முறை சென்னையில் அமைய வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.

மாணவ-மாணவிகளுக்கான நடவடிக்கை
அதோடு பொதுபோக்குவரத்து எந்த அளவுக்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், ,போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது திட்டமிட்டு குறிப்பிட்டு கால வரம்புக்குள் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதோடு பள்ளி மாணவ-மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி இருந்தார்.
-
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications