வெறும் தலையோடு வந்த பைக் ஓட்டிகள்.. ஃபைன் போடாமல் பாஜகவினரோடு ஹெல்மெட் போட்டுவிட்ட சென்னை போலீஸ்
சென்னை: ஹெல்மெட் போடாமல் மொத்தமாக வந்த பைக் ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்காமல், அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹெல்மெட் வழங்கும் விழாவில் பங்கேற்ற போக்குவரத்து போலீசார், பாஜக வழங்கிய ஹெல்மெட்டை வாங்கி அணிவித்தனர்.
தமிழ்நாடு பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்று விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்து வரும் அலிசா அப்துல்லா, இலவச ஹெல்மெட் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
இதில் தமிழ்நாடு பாஜகவின் மூத்த நிர்வாகிகள், போக்குவரத்து காவலர்கள் என பலர் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவித்தனர்.

இலவச ஹெல்மெட்
பிரபல ரேசரான அலிஷா அப்துல்லா ரேசிங் உடையிலும், அண்ணாமலை ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவதைபோன்ற படங்களுடன் சாலையோரம் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனருக்கு அருகிலேயே பல பெட்டிகளில் ஹெல்மெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

போக்குவரத்து போலீஸ்
அங்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் என பலருக்கும் அலிஷா அப்துல்லா ஹெல்மெட் அணிவித்தார். அவர்களுடன் அங்கு நின்று போக்குவரத்து காவல்துறையினரும் ஹெல்மெட்டில் இருக்கும் ஸ்டிக்கரை கிழித்து வாகன ஓட்டிகளுக்கு மாட்டிவிட்டனர்.

அபராதம் வசூலிக்கப்பட்டதா?
தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கான அபராத கட்டணம் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கான ரூ.1,000 என உயர்த்தப்பட்டது. பாஜக வழங்கிய ஹெல்மெட்டை வாகன ஓட்டிகளுக்கு அணிவித்த போக்குவரத்து போலீசார் அவர்களிடம் அபராதம் வசூலித்தார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சென்னையில் ஹெல்மெட்
பொதுவாக தமிழ்நாட்டின் மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது வழக்கம். ஒரு சிக்னலை கடக்கும் ஒரு சிலரை தவிர பலரும் ஹெல்மெட் அணிந்தே இருப்பார்கள். தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கான அபராதம் உயர்த்தப்பட்டதால் இதை அணிவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது.

யாருமே ஹெல்மெட் போடலயா?
ஆனால் பாஜக ஹெல்மெட் வழங்கும் நிகழ்வை நடத்திய சாலையில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலேயே வந்திருந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாஜக இலவச ஹெல்மெட் வழங்குவதை அறிந்துகொண்டு வாகன ஓட்டிகள் இவ்வாறு சென்றதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்.

நீக்கப்பட்ட ட்வீட்
இதுகுறித்து பேனர் மற்றும் வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அலிஷா அப்துல்லா, "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையின் கீழ், எங்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மக்களின் உயிர்காக்கும் ஹெல்மெட்டுகளை வழங்கினோம். இது பெரும் வெற்றிபெற்று உள்ளது." என்று பதிவிட்டார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications