ஏரி போல் காட்சியளிக்கும் சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு .. வைரல் வீடியோ
சென்னை: சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பார்ப்பதற்கு ஏரி போல் காட்சியளிக்கிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அணைகள், ஏரிகள், குளம், குட்டை,ஆறுகள், கண்மாய்கள் என நிரம்பிவிட்டன.
#WATCH Chennai's popular Marina beach flooded due to heavy downpour as a result of cyclonic circulation in the Bay of Bengal#TamilNadu pic.twitter.com/L6N4iIhj1u
— ANI (@ANI) November 11, 2021
மேலும் தலைநகர் சென்னையே தண்ணீர் தேசமாக மாறியுள்ளது. மழை நீர் கால்வாய்களில் அடைப்பு, மெட்ரோ பணிகள் உள்ளிட்டவைகளால் தண்ணீர் போக வழியின்றி பெரும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பரவாயில்லை
2015 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த நிலை பரவாயில்லை என்கிற போதிலும் மக்கள் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நிவாரண முகாம்களில் தங்குவதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

சிறு குழந்தைகள்
இதனால் பெரியவர்கள், சிறு குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு நடுத்தர வயதினர் மட்டும் அந்த வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்களை பாதுகாக்க தங்கியுள்ளார்கள். ஏற்கெனவே நீர் நிலைகள் நிரம்பிய நிலையில் தற்போது அவற்றை திறந்துவிட்டுள்ளனர்.
Recommended Video

மின்சாரம்
இதனால் எங்குத் திறந்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. மக்கள் வீட்டிலிருக்கும் தண்ணீரை வெளியேற்ற வெளியேற்ற மேலும் மேலும் கனமழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இரவு நேரத்தில் விஷ பூச்சிகள் வெள்ளத்தில் அடித்துவருவதாக மக்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை வாங்கக் கூட இடுப்பளவு நீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மெரினா
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மெரினா கடற்கரையிலும் வெள்ளம் சூழ்வது விட்டபாடில்லை. அத்தனை மணல் பரப்பிலும் மழை நீர் சூழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் மெரினாவின் மணற்பரப்பில் தேங்கியுள்ள தண்ணீரால் ஏரி போல் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் மாமல்லபுரம் கடற்கரை, மெரினா உள்ளிட்டவை சீற்றத்துடன் காணப்படுகிறது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications