ஸ்டான்லி மருத்துவமனையில் பழுதான லிஃப்ட்..மாட்டிக்கொண்ட மா.சுப்ரமணியன்.. 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார். அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டில் அவர் சென்றுகொண்டிருந்த போது பழுதாகி இயக்கம் தடைபட்டது. அமைச்சருடன் மருத்துவர்களும் உடன் சென்றனர். அப்போது செய்வதறியாது பலரும் தவித்தனர்.
வேண்டும் என்று யாரும் செய்வதில்லை. இது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று லிஃப்டிற்குள் மாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். இதனையடுத்து லிப்டின் ஆபத்து கால கதவின் வழியாக அவரை அங்கிருந்த ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். அமைச்சருடன் இருந்த மருத்துவர்களும் வரிசையாக கீழே இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் பழுதான லிஃப்ட்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

2 பேர் சஸ்பெண்ட்
இந்த நிலையில் மருத்துவமனை லிஃப்ட்களை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து பொதுப்பணித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்கள்.

கவனக்குறைவு
அமைச்சருடன், நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர். மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது. இது தொடர்பாக அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி லிஃப்ட் பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.

2 பேர் சஸ்பெண்ட்
இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

பராமரிப்பு அவசியம்
அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் (Lifts) மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications