சென்னை புறநகர் + காஞ்சிபுரம்.. திடீர்னு போன உத்தரவால் "தள்ளாடும்" மதுக்கடைகள்.. டாஸ்மாக் போட்ட போடு
சென்னை: மதுக்கடைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம், முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. இது குடிமகன்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளையும் மீறி, பல்வேறு கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தபடியே உள்ளது.

புகார்கள்: இதனை தடுப்பதற்காக, டாஸ்மாக் நிர்வாகமும் பலமுறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில்கூட ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் சில அறிவுறுத்தல்களையும் குறிப்பிட்டிருந்தது.
"சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் மதுபானம் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையின்படியே விற்பனை செய்ய வேண்டும் .. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.. அவ்வாறு விற்பனை செய்தால் பணியாளர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கடையின் வேலை நேரத்தில் பணியில் இல்லாத பணியாளர்கள் குறித்து மேற்பார்வையாளருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்கப்படும்" என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்திருந்தது.
மதுபானங்கள்: ஆனாலும், அதிக விலைக்கு மது விற்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தது..
அதனால்தான், இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம், மதுக்கடைகளுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை கடுமையாக விடுத்துள்ளது.. இது தொடர்பாக சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்திருக்கிறது.
அதில் உள்ளதாவது: "காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும்.
சஸ்பெண்ட்: மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள்மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications