சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டதாக கூறப்படும் 23 வயது இளைஞர் விஷ்ணு, கஞ்சா கும்பலினரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தலைநகர் சென்னையில் குலை நடுங்கச் செய்யும் வகையிலான சம்பவம் அரங்கேறியுள்ளது. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட 23 வயது இளைஞர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை அருகே விஷ்ணு என்ற 23 வயது இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரை பிடித்து தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பலினர் விஷ்ணுவை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். மேலும் அம்மிக்கல், சுத்தியல், பாட்டில்களால் சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடை இளைஞர் விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் கதறி துடித்தனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, விஷ்ணுவின் உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!













Click it and Unblock the Notifications