சென்னையில் வீடு தேடி வரும் சிலிப்.. கொரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் கெரானோ தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து மே 8ல் நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் சிலிப் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 3 அலைகளாக பரவி பொதுமக்களை தாக்கியது. இந்நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளன. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் அமலாகி உள்ளன.

தடுப்பூசி தான் ஆயுதம்
கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக இருப்பதால் அதனை செலுத்த சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை தீவிரம்
தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசியை 93 சதவீதத்தினரும், 2வது தவணை தடுப்பூசியை 77 சதவீதத்தினரும் செலுத்தி உள்ளனர்.
தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி இருந்தாலும் கூட 1.5 கோடி பேர் அதை செய்யவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
இந்த நிலையில் இதற்கு முன்பே போல் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 8ல் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நாளில் காலை முதல் மதியம் வரை ஒரு இடத்திலும், மதியம் முதல் மாலை வரை இன்னொரு இடத்திலும் முகாம் நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

சென்னையில் சிலிப் வழங்கல்
சென்னையை பொறுத்தவரை 2வது தவணை தடுப்பூசி போடாமல் 9 லட்சம் பேர் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை 75 ஆயிரம் பேர் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்களுக்கு வீடு வீடாக சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.

அறிவுரை
இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் தடுப்பூசி போடக்கூடிய மையம் போன்றவற்றை குறிப்பிட்டு மே 8 நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்க அறிவுறுத்துகின்றனர். முகாம் நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் அதற்குள்ளாக ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications