78 வயதில்.. செஸ் ஒலிம்பியாட்டை திரும்பி பார்க்க வைத்த "மூதாட்டி".. சுவாரசிய பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், 78 வயதான மூதாட்டி ஒருவர் இந்த போட்டியில் பங்கேற்று அசத்தி வருகிறார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில், மொனாக்கோவைச் சேர்ந்த மூதாட்டி ஜூலியா லேபல் அரியாஸ் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். இது பார்வையாளர்கள் மட்டுமல்லாது போட்டியாளர்களையும் உற்சாகமாக்கியுள்ளது.

பின்னணி

பின்னணி

1927 முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்கியது. இந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோதுதான் 'சதுரங்க விளையாட்டு' தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த விளையாட்டு மீதான அனைவரது பார்வையும் இந்தியா மற்றும் இந்திய அணி மீது திரும்பியிருக்கிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

பொதுவாக, ஒரு பெரிய நிகழ்வுக்கு தயாராவதற்கு ஒரு நாட்டிற்கு சில வருடங்கள் வழங்கப்படும். ஆனால் இந்தியாவுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. 44 வது செஸ் ஒலிம்பியாட் ரஷ்யாவில் நடைபெறவிருந்தது. ஆனால் யுக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF),இந்த 10 நாள் போட்டியை நடத்த 1 கோடி டாலர்களை தமிழக அரசுக்கு வழங்கியது. இதில்1700 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். உலகின் தலைசிறந்த அணியான ரஷ்யா மற்றும் சீனாவும் இந்த ஒலிம்பியாடில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஏறக்குறைய எல்லா முன்னணி நாடுகளும் தங்கள் சிறந்த வீரர்களுடன் கலந்துகொள்ள இருக்கின்றன.

 மூதாட்டி

மூதாட்டி

இப்படி சிறப்பாக நடத்து வரும் செஸ் போட்டியில், 78 வயதான மொனாக்கோவைச் சேர்ந்த மூதாட்டி ஜூலியா லேபல் அரியாஸ் பங்கேற்று அசத்தி வருகிறார். விளையாட்டு என்றாலே அது இளைஞர்களுக்கு மட்டுமானது என்று பலரும் நினைத்து வரும் நிலையில் இந்த மூதாட்டி களத்தில் இறங்கியுள்ளார். பங்கேற்பாளராக மட்டுமல் இல்லாது தற்போது வரை விளையாடிய போட்டியில் 2 வெற்றியையும் அவர் பதிவு செய்துள்ளார். மூதாட்டியின் இந்த விளையாட்டு பாணி பார்வையாளர்கள் மட்டுமல்லாது சக போட்டியாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

    செஸ் ஒலிம்பியாட்டின் தம்பி எப்படி வந்தது?
    போட்டி நிலைமை

    போட்டி நிலைமை

    11 சுற்றுகள் கொண்ட இந்த ஒலிம்பியாட் போட்டியில் அதிக புள்ளியை குவிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவிலும் இந்தியா சார்பில் தலா 3 அணிகள் களம் கண்டுள்ளன. முதல் 3 சுற்றுகளில் இந்திய அணிகள் அனைத்தும் வெற்றிகளை குவித்தது. 4-வது சுற்றில் பெண்கள் பிரிவில் இந்தியா 3-வது அணியும், ஓபன் பிரிவில் இந்தியா 3-வது அணியும் முதல் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் 5-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது.

    ஓபன் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றியை அள்ளியது. இந்தியா 1 அணி 2½-1½ என்ற புள்ளி கணக்கில் ருமேனியாவை தோற்கடித்தது, ஹரிகிருஷ்ணா, விதித் குஜராத்தி, நாராயணன் ஆகியோர் தங்களது ஆட்டத்தில் டிரா செய்த நிலையில் மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகாசி 46-வது காய் நகர்த்தலில் பார்லிகிராஸ் மிர்சியாவை தோற்கடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+