சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் உயிரைப் பறித்துள்ளது..கோவை மாணவி மரணம் குறித்து ஸ்டாலின்!
சென்னை: கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வி;டடரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
ஆனால், அந்த ஸ்கூலில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொன்னதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அம்மணியம்மாள் என்ற பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.

தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

பாலியல் சீண்டல்
அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பெயர் கெட்டுவிடும்
ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, பெற்றோரிடமும் இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். இதனிடையே ஆசிரியர் மிதுன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி பள்ளியை விட்டு வெளியேறி, அதே பகுதியில் உள்ள வேறு ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்தார். ஆனாலும் ஆசிரியர் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது

பாலியல் தொல்லை
இந்த நிலையில், பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு, திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தாராம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்.. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாகவும், இது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

உரிய விசாரணை
இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.. அதில் "யாரையும் சும்மா விடக்கூடாது.. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார், யாரையும் விடக் கூடாது" என்று கைப்பட எழுதியுள்ளார்.. இந்த டார்ச்சர் நடந்துள்ளதாக இப்போது தான் கூட படிக்கும் மாணவிகள் சொல்கிறார்கள். பஸ்ஸில் இடித்தால் பொறுத்து போகிறோம். இதை பெரிது படுத்த வேண்டாம் என்கிறார்கள் என்று மாணவியின் தாயார் கதறிஅழுதார். இந்த வீடியோ வைரல் ஆனது.

முற்றுகை போராட்டம்
இதனிடையே மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர்.

ஜெயச்சந்திரன் பேட்டி
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவி வீட்டிற்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன் பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், " ஏற்கனவே மிதுன் சக்கரவர்த்தி மூலம் போடப்பட்ட வழக்கில் முதல்வர் மீரா ஜாக்சனும் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மீரா ஜாக்சன் குற்றவாளியாக சேர்க்கபட்டு ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பபட்டுள்ளது. சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது" என்றார்.

ஸ்டாலின் கருத்து
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனக்குரல் எழுப்பினர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என்று கூறியுள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications