ஈரோடு மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஈரோடு மக்களின் 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தின் கல்வி களஞ்சியமாக சிக்கய்ய நாயக்கர் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும் என மாவட்ட மக்கள் சுமார் இருபது ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஈரோடு மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்து சமுதாய ஆர்வலர்கள் கூட்டு முயற்சியால் 1954ஆம் ஆண்டு ஈரோடு சத்தி சாலையில் உள்ள சூழலில் மகாஜனக்கல்லூரி என்ற பெயரில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது பின்னர் சிக்கய்ய நாயக்கர் மகாஜனக் கல்லூரி என்றும் , சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என்றும் பெயர் மாறியது.

ஈரோட்டில் பெரிய கல்லூரி
52 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பெரியார் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த கல்லூரி கோவை மண்டல கல்லூரிக் கல்வி துணை இயக்குனர் பாதுகாவலராக கொண்டு இயங்கி வருகிறது கடந்த 60 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றிய இந்தக் கல்லூரி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் என பலரை உருவாக்கி உள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் கல்லூரி
இந்தக் கல்லூரியின் நிர்வாகிகள் கல்லூரிக்கான அனுமதியை உயர்கல்வித் துறையும் புதுப்பிக்க தவறியதாலும் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டதால் 2002ஆம் ஆண்டு முதல் தனியார் ஒழுங்காற்று சட்டத்தின்படி கல்லூரி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கல்லூரியில் 11 இளங்கலை படிப்புகளும் மூன்று மொழிகளை படிப்புகளும் உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

20 ஆண்டுகால கோரிக்கை
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படுவது மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஈரோடு மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி இல்லாத நிலையில் இந்த கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 20 ஆண்டுகளாக இந்த மக்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
Recommended Video

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி
ஈரோடு மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் 104 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற அறுபத்தி ஆறு திட்டப் பணிகளுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முடிவற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் முடிவடைந்தவுடன் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருவேன் என கூறினார் மேலும் ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையாக , ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயின்று வரும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் என்ற மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications