கமகம சாம்பார்.. சுடச் சுட சுவையான தக்காளி ரசம்.. மெய் மறந்த ஜிங்பிங்!
Recommended Video
சென்னை: சீனாவில் இருந்து பல்லாயிரம் மைல் தாண்டி தமிழ்நாட்டுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நம்ம மக்களின் பாசமான உபசரிப்பு நிச்சயம் அதிஅற்புதம் தான். அவருக்கு இன்று இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி ரசம், அரச்சுவிட்ட சம்பார் உள்ளிட்டவைகளை பரிமாறி உள்ளார்கள்.
ஒரு நாளில் அறுசுவை உணவுகளையும் ஒரு மனிதன் சாப்பிட வேண்டும் என்பதே தமிழகத்தின் பண்பாடு. அதாவது தலைவாழை இழை வைத்து, சோறு, சாம்பாரு, புளிக்குழம்பு, ரசம், தயிர், கூட்டு வகைகள், இனிப்பு என ஒரே நேரத்தில் ஆறுசுவை உணவுகளையும் சாப்பிடுவார்கள் தமிழர்கள்.
அதாவது கார்ப்பு(காரம்), புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு என ஆறு சுவை உணவையும் ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதே மரபு . இந்த ஆறுசுவை உணவுகளையும் சாப்பிடுபவர்களுக்கு தீர்க்க ஆயுளும், நல்ல உடலும் நிச்சயம் இருக்கும்.

தமிழர்களின் சாப்பாடு
நமது ஊரில் ஒவ்வாரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுகள் ரொம்பவே உலக பேமஸ், குறிப்பாக செட்டுநாட்டு உணவுகளை சொல்வவே வேண்டாம். இந்த உலகத்தில் ருசியான சாப்பாடுகளை கண்டுபிடித்தவர்கள் என்றால் நிச்சயம் தமிழர்கள் தான்.

சாம்பாரு, ரசம், அல்வா
அப்படிப்பட்ட தமிழ் மண்ணுக்கு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு தமிழ் பாரம்பரிய உணவுகளை இன்று இரவு விருந்தில் பரிமாறப் போகிறார்கள். குறிப்பாக தக்காளி ரசம், அரைச்சு விட்ட சம்பார், கவனரசி அல்வா உள்ளிட்டவை இடம் பெறப்போகிறதாம்.

கண்ணீர் வரும்
தலைவாழை இழையில் மல்லைகப்பூ போன்ற சோற்றில், நல்லா அம்மியில வலுவலுவென சின்ன வெங்காயம் போடடு அரைச்சுவிட்ட சாம்பாரை ஊற்றி, நெய்யை சிறிது விட்டு சாப்பிட்டால் ஆஹா என்ன அற்புதம் என்று வாயை திறக்காமலேயே நாமே சொல்லிவிடுவோம். அப்படியே இரண்டு கைக்கு ஒருமுறை உருளைக்கிழக்கு, கேரட் என என ஏதேனும் ஒரு கூட்டை கையை வைத்து அப்படியே உள்ளே தள்ளும் போது இதற்கு தானே பிறந்தோம் என கண்களில் நிச்சயம் மெல்லிய கண்ணீர் எட்டிபார்த்து செல்லும்.

அப்பளத்தை அடித்து
அப்படியே கொஞ்சம் புளிக்குழம்பை சாப்பிட்டுவிட்டு, தக்காளி ரசத்தை அடுத்த ரவுண்டில் ஊற்றி சாப்பிட்டால், அங்கே கூட்டுப்பொறியல் தீர்ந்து போயிருக்கும். அதை கூச்சப்படமால் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு, கடைசியில் தயிரில் ஒரு ரவுண்டை சாப்பிட்டு விட்டு, அப்பளைத்தை அடித்து பாயாசத்தில் போட்டு சாப்பிட்டு மனம் இந்த பூமிக்கு வந்ததை எண்ணி ஒரு முறை மகிழும்.

தித்திப்பை உணருவார்
கடைசியில் மீதமிருக்கும் அல்வாவை சாப்பிட்டால் நாக்கு தித்திப்பால் தள்ளாடும். அப்போது இருக்குமே மன நிறைவு. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் தித்திப்புத்தான். இந்த தித்திப்பை நிச்சயம் இன்று சீன அதிபர் ஜி ஜின் பிங் உணந்திருப்பார்.

வியக்க போகிறார்
பிரதமர் மோடியை சந்திக்க வந்த சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு நம்மூரை ரெம்பவே பிடிக்கும் என்கிறார்கள். காரிலேயே மொத்த ஊரையும் சுற்றி பார்த்தபடித்தான் அவர் மாமல்லபுரம் சென்றார். திரும்பவும் சென்னை வருகிறார். என்ன அழகு, எத்தனை அழகு என்று நம்மூரை பாடி வியக்கபோகிறார். அவருக்கு நம்மூர் சாப்பாடும், நம்ம மக்களும் காட்டும் பாசம் நிச்சயம் தித்திப்பை தந்திருக்கும்.

இதயங்களை வென்றவர்கள்
ஏனெனில் தமிழர்கள் வெறும் சாப்பாட்டை மட்டும் பரிமாறுவது இல்லை. அன்பையும், பாசத்தையும் சேர்த்துத்தான் பரிமாறுவார்கள். எதிரியே வந்தாலும் வரவேற்று விருந்தளிப்பது தமிழனின் பண்பாடு. அப்படி இருக்கையில், நம்மை பார்க்க தோழமையுடன் பாசத்துடன் வந்த சீன அதிபரை நம்ம மக்கள் சும்மாவிடுவார்களா என்ன.. நிச்சயம் அவர் ஊருக்கு செல்லும் போது மனதுக்குள் சொல்வார். என் இதயங்களை வென்றவர்கள் தமிழர்கள் என்று..,
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications