திடீர்னு மசூதியில் இருந்து சத்தம்.. டக்கென திரும்பிய எடப்பாடியார்.. பட்டைய கிளப்பிய பட்டுக்கோட்டை
எடப்பாடி பழனிசாமி பாகு சத்தம் கேட்தும் பிரச்சாரத்தை நிறுத்தினாரை
சென்னை: பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தபோது, திடீரென பாங்கு சத்தம் கேட்டதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பேச்சை உடனே நிறுத்திவிட்டார்.
தேர்தல் களை கட்டி உள்ளது.. இந்த முறை ஆட்சியை தக்கவைக்க அதிமுக அரசு மும்முரம் காட்டி வருகிறது.. அதற்கு அச்சாரமாக இந்த 4 வருட காலங்களில் செய்த நன்மைகளை, திட்டங்களை, மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வாக்குகளை கேட்டு வருகிறது.
அந்த வகையில், முதல்வரும் தன் பிரச்சாரத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. நேற்றுகூட அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து பட்டுக்கோட்டையில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார்..

திமுக விமர்சனம்
திறந்த ஜீப்பில் நின்று கொண்டு, அதிமுகவின் சாதனைகளை லிஸ்ட் போட்டும், திமுக விமர்சித்தும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. அப்போது திடீரென பாங்கு சத்தம் கேட்டம், பக்கத்தில் இருந்த பள்ளிவாசலை திரும்பி பார்த்த முதல்வர், தன்னுடைய பேச்சை டக்கென நிறுத்தி கொண்டார்.. சற்று நேரம் அமைதி காத்தார்.. பாங்கு ஒலி நின்றதும் தன் பேச்சை மறுபடியும் தொடங்கினார்..

ஆரவாரம்
ஆனால், இதை கவனித்துவிட்ட அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பலமாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.! இப்போது என்றில்லை.. முதல்வர் எப்போது, எங்கு பிரச்சாரம் செய்தாலும் சரி.. மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாங்கு சத்தம் வந்துவிட்டால் அப்படியே தன் பேச்சை நிறுத்திவிடுவார்.

தேர்தல்
கடந்த தேர்தலில் வாழப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கேட்டது.. உடனே முதல்வர் தனது பேச்சை நிறுத்தி விட்டார்... தொழுகை முடிந்த பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

சசிகலா
அப்படித்தான் 2 மாதத்துக்கு முன்பும் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. காரசாரமாக திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து கொண்டிருந்தார்.. "ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானாலும் சரி, தமிழகத்தில் அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும்" என்று ஸ்டாலினுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போதுதான் பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து பாங்கு ஒலித்தது.. தன் பேச்சை நிறுத்திய எடப்பாடியார், அந்த சத்தம் நிற்கும் வரை அமைதி காத்து, அதற்கு பிறகே ஸ்டாலினை விமர்சிக்க ஆரம்பித்தார்.

வரவேற்பு
கடந்த சில நாட்களாகவே தேர்தலை முன்னிட்டு, சிஏஏ விவகாரத்தை மறுபடியும் அதிமுக, திமுக கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.. இதில் அதிமுக மீதான விமர்சனங்களை திமுக வைத்து வரும் நிலையில், முதல்வரின் இந்த செயல்பாடு பட்டுக்கோட்டை இஸ்லாமிய மக்களை கவர்ந்து இழுத்து வருகின்றன...!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications