சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்முறையாக.. ஸ்ட்ரைட்டாக ஒரு "பிடி பிடித்து" .. வச்சு செய்த எடப்பாடியார்.. வெலவெலத்த வேலூர்!

எடப்பாடி பழனிசாமி அமமுகவை அட்டாக் செய்து பேசினார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா, தினகரனை சாடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சைக்கேட்டு, நேற்று வேலூரே வெலவெலத்து போய்விட்டது...!

சசிகலா 7 நாள் ரெஸ்ட்டில் இருந்தபோது, அவரை ஒருசில புள்ளிகள் சந்தித்ததாகவும், எம்எல்ஏக்கள்கூட சிலர் சந்தித்து பேசியதாகவும் செய்திகள் பரபரத்தன..

அதேபோல, சசிகலா கையில் செல்போன் ஒப்படைக்கப்பட்டவுடனே, அமைச்சர்கள் சிலரும் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வந்தன.

 ஆதரவு

ஆதரவு

அதனால், சசிகலா சென்னைக்கு வரும்போது, அவரை வரவேற்க எப்படியும் அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒருசில அமைச்சர்களாவது நேரில் வந்து வரவேற்பு தருவார்கள், தங்கள் ஆதரவை தருவார்கள் என்று அமமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அந்த நினைப்பு புஸ்ஸென்று போய்விட்டது.

 முதல் வெற்றி

முதல் வெற்றி

இதுவே எடப்பாடியாருக்கு கிடைத்த முதல் வெற்றி என்றுகூட சிலர் கருதுகிறார்கள்.. யாரும் சசிகலாவுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்று ஒத்த வார்த்தையை, அதுவும் வாய்மொழியாகத்தான் தன் நிர்வாகிகளிடம் எடப்பாடியார் கேட்டு கொண்டிருந்தார்.. அதற்கே இவ்வளவு மதிப்பு தந்து, யாருமே சசிகலாவை வரவேற்க செல்லாதது முதல்வரின் முதல் சக்ஸஸ் ஆக பார்க்கப்படுகிறது.

கார்

கார்

அதேபோன்று காரில் கட்சி கொடியை கட்டக்கூடாது என்று போலீசார் எச்சரித்தும் கொடியுடன் அங்கிருந்து சசிகலா கிளம்பியது அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்தது.. இதனால், ஒருசில இடங்களில் அதாவது, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிமுக, அமமுக இடையே மோதல் வெடிக்கும் சூழல்கூட ஏற்பட்டது... ஆனால், முதல்வர் தரப்பு துரிதமாக செயல்பட்டது..

 இரண்டாவது சக்சஸ்

இரண்டாவது சக்சஸ்

யாரும் எந்த மோதலிலும் ஈடுபட்டு விடக்கூடாது, அப்படி நடந்தால் நம் ஆட்சிக்குதான் கெட்ட பெயர் வந்துவிடும், அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவும், அதன்படியே அதிமுகவினர் நடந்து கொண்டனர்.. இதுவும் எடப்பாடியாரின் இரண்டாவது சக்சஸ்.

 ரத்து ஏன்?

ரத்து ஏன்?

அதேபோல, அன்றைய தினம் 8-ம்தேதி முதல்வர் வேலூரில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.. ஆனால், சசிகலாவின் வருகையால் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார் என்று மீடியாக்களில் செய்திகளும் வெளியானது.. "இவ்வளவு பேசிவிட்டு, வேலூர் பிரச்சாரத்தை முதல்வர் ஏன் ரத்து செய்ய வேண்டும்? அந்தம்மா ஒரு பக்கம் காரில் போனால், இவர் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்ய வேண்டியதுதானே?" என்ற பரவலான பேச்சுக்களும் எழவே செய்தன. ஆனால், ரத்து செய்யப்பட்ட பிரச்சாரத்தைதான் நேற்று முதல்வர் மேற்கொண்டார்... தனக்கு எதிராக பேசியவர்களுக்கு மட்டுமில்லை, சசிகலாவுக்கும் தினகரனுக்கும் சேர்த்து தனது பிரச்சாரத்தில் ஆவேசமாகப் பதிலளித்தார் எடப்பாடியார்.

சசிகலா

சசிகலா

"அதிமுகவைப் பின்னடைய செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்... டிடிவி தினகரன் அதில் ஒருவர்... 10 ஆண்டு காலம் கட்சியிலேயே கிடையாது... அம்மா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியே வெச்சிருந்தாங்க... அம்மா மறைவுக்கு பிறகு அவர் கட்சியில சேர்ந்துக்கிட்டதா அவரே அறிவிச்சுக்கிட்டாரு... அவர் அதிமுகவை கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுமாங்க? எங்க கட்சி எம்எல்ஏக்கள் 18 பேரை பிடிச்சிக்கிட்டுப் போயிட்டாரு... அந்த 18 பேரையும் நடுரோட்டுலயும் விட்டுட்டுப் போயிட்டாரு... அவரை நம்பி போனவங்க எல்லாம் நடுரோட்டுலதான் நிக்கணும்...

பின்னடைவு

பின்னடைவு

இப்படி ஏதாவது செய்து, அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுறதுக்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக்கிட்டிருக்காங்க... அதை அதிமுக முறியடிக்கும்... சில சதிகாரர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்கு பின்னிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சதி வலையை சின்னபின்னமாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம்"என்றார்.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

சதிவேலை, சதிகாரர், சதி திட்டம் என அடுத்தடுத்து சசிகலாவை மறைமுகமாக குறித்து முதல்வர் எடப்பாடி பேசியிருப்பது அதிமுக, அமமுக வட்டாரங்களில் மட்டுமல்ல, பாஜகவும் அதிர்ச்சியோடுதான் பார்த்து வருகிறது.. சசிகலா வீட்டுக்கு திரும்பி வந்தபோதும், எந்த சலசலப்புகளுக்கும், நடக்க போகும் பரபரப்புக்கும் அஞ்சாமல், எடப்பாடியார் இப்படி பேசியதை தமிழக மக்களே உற்று கவனித்தனர்.

சாதனைகள்

சாதனைகள்

இந்த செகண்ட் வரை முதல்வர் தன்னை மட்டும் நம்புகிறார் என்பதும், தன் சாதனைகளை மட்டுமே நம்பி களம் காண போகிறார் என்பதும், இந்த 4 வருஷமாக மக்களுக்கு நல்லது செய்த நலத்திட்டங்களும் அறிவிப்புகளும் தன்னை கைவிடாது என்றும் முழுசுமாக நம்புகிறார்.. அதுமட்டுமல்ல, அதிமுகவுக்கு எந்த ஆபத்து வந்தாலும் அதை பொறுத்து கொண்டிருக்க முடியாது என்ற உத்வேகமும் முதல்வரின் பேச்சில் நன்கு வெளிப்பட்டு கொண்டிருக்கிறது..!

English summary
CM Edappadi Palanisamys mass speech in Vellore Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X