"பதுங்கினால்.. பாய்வோம்".. மாஜியை சுட்டிக்காட்டி.. சட்டசபையில் கண்டிப்புடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தவறு செய்துவிட்டு பதுங்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசினார். அரசின் சாதனைகளையும், நோக்கங்களையும் எடுத்துரைத்த ஆளுநரின் உரைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அண்ணாவின் கூற்றுப்படி ஆளுநர் உரை மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் எதிர்கட்சித் தலைவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசினார். தவறு செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலின் உரை
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், நாங்கள் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் கொடுத்த பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மீதி வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். கடந்த ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த அரசை மக்கள் நம்புகிறார்கள்.

வாக்குறுதிகள்
நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுங்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

தவறு செய்தால் தண்டனை
நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இந்த உண்மையுடன்தான் நான் வாழ்நாள் முழுக்க செயல்படுவேன். தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பான். அரசின் நடவடிக்கைக்கு பயந்து நடுக்கும் நபர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தர மாட்டோம்.

பயம் இருந்தால் நடவடிக்கை
இந்த வழக்கு பாயுமோ என்று பயந்து நடுங்குகிறவர்களுக்கு திமுகவின் இந்த அரசு எந்த காலத்திலும் பாதுகாப்பு வழங்காது. தவறு செய்யாதவர்கள் கவலைப்பட வேண்டியது கிடையாது. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். நாங்கள் மாற்றினோமா அல்லது தூத்துக்குடியில் 13 பேரை கொன்ற போது நீங்கள் காவல்துறையை ஏவல்துறையாக மாற்றினீர்களா?

பாய்ந்து நடவடிக்கை
பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். தவறு செய்யும் நபர்கள் மீது நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். பதுங்கும் நபர்கள் யாராக இருந்தால் அச்சமின்றி இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications