சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமதாஸுக்கு போனை போட்ட ஸ்டாலின்.. மறுபக்கம் விஜயகாந்த்துக்கும் ஒரு கால்.. இதான் "ஸ்டாலின்"!

முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நாகரீகம் பாராட்டை பெற்று வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பதவியேற்றது முதலே, முதல்வர் ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஆச்சரியத்தை தருவதாக திமுகவினர் பெருமிதம் கொள்கிறார்கள்.. ஒரு பக்கம் ராமதாசுக்கு போன் போடுகிறார்.. இன்னொரு பக்கம் விஜயகாந்த்துக்கு போன் போடுகிறார்.. இதையெல்லாம் பார்த்து கூட்டணியில் உள்ள அதிமுகவே மிரண்டு போய் கிடக்கிறதாம்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த வாரம் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.. மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது குறித்த வழக்கமான அறிக்கைதான் அது..

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் காலமானார் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனாவால் காலமானார்

முதல்வராக பதவியேற்றிருந்த ஸ்டாலினின் கவனத்துக்கு இந்த அறிக்கை சென்றது... அறிக்கையை படித்து பார்த்தார் ஸ்டாலின்..

ராமதாஸ்

ராமதாஸ்

மதுக் கடைகள் இல்லாமலும் அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்பது முதல் சில புள்ளி விவரங்களையும் டாக்டர் ராமதாஸ் அதில் தெரிவித்திருந்தார்.. இதையடுத்து, துரைமுருகனிடம் இந்த அறிக்கை பற்றி விவாதித்திருக்கிறார். பிறகு துரைமுருகனே ராமதாஸுக்கு போன் போட்டு பேசியுள்ளார்.. துரைமுருகனும், ராமதாஸும் நல்ல நண்பர்கள் என்பதாலும், அவர்களுக்குள் ஒரு இணக்கமான போக்கு எப்போதுமே இருப்பதாலும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துள்ளனர்..

 மதுக்கடைகள்

மதுக்கடைகள்

பிறகு ஸ்டாலினும் ராமதாஸிடம் பேசியுள்ளார். "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று ஒரு கோரிக்கையை வைத்தாராம் ராமதாஸ்.

தலைமை

தலைமை

இதற்கு ஸ்டாலின்.. "நன்றி ஐயா.. தொடர்ந்து இதுபோன்ற ஆலோசனைகளை கொடுங்க.. முடிஞ்சவரைக்கும் செயல்படுத்துறோம்" என்றார் ஸ்டாலின். இதைதான், பாமகவின் தலைமை நிலையம் ஒரு செய்திக்குறிப்பாகவே வெளியிட்டிருந்தது.. ஸ்டாலின் பேசிய விஷயத்தையும் அதில் விரிவாகவே தெரிவித்திருந்தது.

 அரசியல் கட்சி

அரசியல் கட்சி

இதேபோல, விஜயகாந்த்துக்கும் போனை போட்டு பேசியுள்ளார் ஸ்டாலின்.. பதவியேற்பு விழாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்.. ஆனால், இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை.. அவருக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.. அதனால், பதவியேற்பு விழாவுக்கு அவரால் செல்ல முடியாததால், ஸ்டாலின் வீட்டுக்கு சுதீஷூம், விஜய பிரபாகரனும் சென்றுள்ளனர்.. அவர்களை உபசரித்து அன்பாக பேசியுள்ளார் ஸ்டாலின்..

 பூரிப்பு

பூரிப்பு

விஜயகாந்த் உடல்நலம் குறித்தும் நீண்ட நேரம் விசாரித்துள்ளார் ஸ்டாலின்.. இதை பார்த்து, சுதீஷூம், விஜயபிரபாகரனும் ஆச்சரியப்பட்டு போனார்களாம்.. வீட்டுக்கு போய், இதை பிரேமலதாவிடமும் விஜயகாந்திடமும் சொல்லி உள்ளார்கள்.. இதை கேட்டதும் விஜயகாந்த் அப்படியே பூரித்து போய்விட்டாராம்..

 விஜயகாந்த்

விஜயகாந்த்

மேலும் ஸ்டாலினும் விஜயகாந்த்துக்குப் போன் போட்டு பேசியுள்ளார்.. போனில் உடல்நலம் குறித்து விஜயகாந்திடமே ஸ்டாலின் விசாரித்துள்ளார்.. முதல்வராக பொறுப்பேற்றதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு மெல்லிய குரலில் சொன்னாராம் விஜயகாந்த்.. ஸ்டாலினும், விஜயகாந்த்தும் பேசிய தருணங்கள் மிக மிக நெகிழ்ச்சியாகவே இருந்துள்ளது..!

 விமர்சனம்

விமர்சனம்

அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும், மீண்டும் ரவுடி ஆட்சி என்றெல்லாம் அதிமுக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், ஸ்டாலினின் நடவடிக்கைகளை பார்த்தால், கண்டிப்பும், பாசமும் கலந்து தென்படுகிறது..

 கருணாநிதி

கருணாநிதி

தலைவர்கள் யாராவது பத்திரிகைகளில் முக்கிய தகவல்களை வெளியிட்டால், அதுகுறித்து கருணாநிதி அப்போதே, சம்பந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சர், அதிகாரிகளை வரவழைத்து ஆலோசிப்பார்.. அதுபோலவேதான் ராமதாஸ் விஷயத்திலும் ஸ்டாலின் நடந்துள்ளார்.. அதிரடிகளை கையில் எடுப்பதில் ஜெயலலிதா போலவும், அரசியல் நுட்பம், பொறுமையில் கருணாநிதி போலவும் என இரு தலைவர்களின் பாணியில் ஸ்டாலின் நகர்ந்து வருவது வரவேற்கத்தக்கதே!

English summary
CM MK Stalins political Culture is appreciated by all
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X