சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே கல்லில் 2 மாங்காய்.. கனலாக பொங்கிய நெருடலை "சரி கட்டிய" ஸ்டாலின்.. அப்போ சான்ஸே இல்லையா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசிய விஷயங்கள் பல்வேறு சந்தேங்களுக்கு தீர்வாக அமைந்து உள்ளன. முக்கியமாக கூட்டணி கட்சிகளின் மனதில் இருந்த பல நெருடல்களுக்கு இது தீர்வாக அமைந்தது.

கடந்த சில வாரங்களாக திமுக கூட்டணி கட்சிகள் இடையே இரண்டு விதமான சந்தேகங்கள் நிலவி வந்தன. முதல் விஷயம் கூட்டணி தலைவர்களை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கொடுக்க மாட்டேங்கிறார் என்ற புகார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கூட்டணி தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் பெரிதாக சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பங்கீட்டின் போதும் முதல்வர் ஸ்டாலின் பெரிதாக கூட்டணி தலைவர்களை சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் முதல்வர் ஸ்டாலினோ.. இயல்பை விட அதிக நேரம் வேலை பார்க்கும் காரணங்களால் ஆட்சி நிர்வாகம் தவிர்த்து .. அரசியல் ரீதியாக சந்திப்பு எதையும் நடத்தாமல் தவிர்த்து வந்தார்.

'கனி இங்கே வாமா..' கருணாநிதி நினைவிடத்தில் தங்கையை பாசமுடன் அழைத்து பக்கத்தில் நிறுத்திய ஸ்டாலின்! 'கனி இங்கே வாமா..' கருணாநிதி நினைவிடத்தில் தங்கையை பாசமுடன் அழைத்து பக்கத்தில் நிறுத்திய ஸ்டாலின்!

சந்திப்பு

சந்திப்பு

முடிந்த அளவு கூட்டணி தலைவர்களிடம் போனில் பேசி அவர்களிடம் அன்பு காட்டி வந்தார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். விசிக தலைவர் திருமாவளவன் தாயார் உடல்நிலை சரியில்லாத போது அவருக்கு போன் செய்து பேசினார். கேரளாவில் நடத்த நிகழ்வு ஒன்றில் சிபிஎம் உடன் இருக்கும் நட்பு பற்றி பேசினார். கூட்டணி தலைவர்களை சந்திக்க முடியவில்லை என்றாலும் இப்படி முடிந்த அளவு கூட்டணி கட்சிகளிடம் ஸ்டாலின் நெருக்கமாகவே இருந்தார். இருந்தாலும்.. கூட்டணி தலைவர்களை ஸ்டாலின் புறக்கணிக்கிறார் என்ற பேச்சு அரசியல் விமர்சகர்கள் இடையே நிலவித்தான் வந்தது.

இரண்டாவது சந்தேகம்

இரண்டாவது சந்தேகம்

சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி, கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வெங்கையா நாயுடு வந்தது என்று பல இடங்களில் பாஜக தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டினார். அதிலும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மோடியுடன் நட்பாக இருந்தார். இதனால் பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுகிறதோ. பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுக நினைக்கிறதோ. பாஜகவை திமுக முன்பு போல எதிர்க்காதோ என்ற அரசியல் விமர்சகர்கள் பலர் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.

நேற்று பேசினார்

நேற்று பேசினார்

ஆனால் நேற்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் ஒரே நேரத்தில் பதில் அளித்துள்ளார். திருப்பூரில் நடந்த 25வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் ஆன்லைனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. ஒரு விளக்கத்தோடு தனது உரையை தொடங்கினார். எனக்கு கொரோனா இப்போதுதான் வந்துவிட்டு போனது. மருத்துவர் வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அதனால் நேரில் வராமல் ஆன்லைனில் பேசுகிறேன். இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று விளக்கத்தோடு ஸ்டாலின் பேசினார்.

 ஸ்டாலின் உரை

ஸ்டாலின் உரை

ஸ்டாலின் தனது உரையில், திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது மொத்த இந்தியாவிற்குமானது. இது மாநிலத்திற்கு மட்டுமானது கிடையாது இந்தியாவிற்கே திராவிட மாடல் ஆட்சிதான் வழிகாட்டியாக இருந்து வருகிறது. நாம் தமிழ்நாட்டின் முதல்வரானது தானாக நடந்து விடவில்லை. தோழமை கட்சிகளின் பங்கு அதில் அளப்பரியது. தோழமை கட்சிகளான நீங்கள் தந்த ஆதரவால்தான் நான் இங்கே இருக்கிறேன்.

தோழமை கட்சிகள்

தோழமை கட்சிகள்

நாம் வைத்து இருக்கும் கூட்டணி கொள்கை கூட்டணி. விடுதலை பற்றி பேசிய காங்கிரசும், சமூக விடுதலை பேசிய திராவிட முன்னேற்ற கழகமும், வர்க்க விடுதலை பேசிய கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஒன்றாக ஒரே குடைக்கு கீழே வந்து இருக்கிறோம். ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம். இது தேர்தல் தாண்டிய கொள்கை கூட்டணி என்று இதனால்தான் சொல்கிறேன். நம் கூட்டணி தேர்தல் கடந்தும் நிலைத்து இருக்கும், என்று தோழமை கட்சிகளை பாராட்டி பேசினார்.

கூட்டணி

கூட்டணி

தோழமை கட்சிகளை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக.. உங்களால்தான் முதல்வரே ஆனேன் என்று அடக்கமாக கூறியது கூட்டணி கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. அதோடு பாஜகவையும் கடுமையாக சாடி பேசினார். பாஜகவை நேரடியாக குறிப்பிடாமல்.. ஒரே மொழி.. ஒரே நாடு.. கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் தனது உரையில், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்.. ஒன்றாக பிறந்தவர்கள்.. நாம் எல்லோரும் ஒன்று என்று பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே மதம், ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே அது தேச விரோதமா?

கேள்வி

கேள்வி

நாம் கேட்க வேண்டிய கேள்வி இப்போது இதுதான். மொத்த இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி இதுதான். மொழிகளாக நாம் பிரிந்து இருந்தாலும் அண்டை மாநிலங்களுடன் நாம் நட்புணர்வுடன் இருந்து வருகிறோம். ஆனால் இது சிலருக்கு பிடிப்பது இல்லை. நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. இதை சிதைப்பதை நோக்கமாக கொண்டு சுற்றுகிறார்கள். இவர்கள்தான் தேச துரோகிகள். இப்படிப்பட்ட சக்திகள்தான் தேசத்திற்கு துரோகம் செய்யும் தேச துரோகிகள்.

துரோகிகள்

துரோகிகள்

நம்முடைய நாட்டின் ஒற்றுமைக்கும், உரிமைக்கும், சமத்துவத்திற்கு உலை வைப்பவர்கள் இவர்கள்தான் என்று பாஜகவை சாடும் விதமாக கடுமையாக முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதன் மூலம் இரண்டாவது சந்தேகமான.. பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார். பாஜகவை கடுமையாக தாக்கியதன் மூலம் அவர்களுடன் கூட்டணிக்கு சான்ஸே இல்லை என்பதையும் மறைமுகமாக ஸ்டாலின் தெரிவித்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசிய இந்த விஷயங்கள் கூட்டணி கட்சிகளின் மனதில் இருந்த 2 நெருடல்களுக்கும் விடையாக அமைந்து உள்ளது.

English summary
CM Stalin clarifes two important things in his speech at CPI meeting. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசிய விஷயங்கள் பல்வேறு சந்தேங்களுக்கு தீர்வாக அமைந்து உள்ளன. முக்கியமாக கூட்டணி கட்சிகளின் மனதில் இருந்த பல நெருடல்களுக்கு இது தீர்வாக அமைந்தது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X