சர்ச்சை எழாத வண்ணம் சேது சமுத்திர திட்ட தீர்மானத்திலேயே குறியாக இருந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் எந்தவித சர்ச்சைகளும் பிரச்சினைகளும் எழாத வண்ணம் சேது சமுத்திர திட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதிலேயே முதல்வர் ஸ்டாலின் குறியாக இருந்தார்.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் இன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசினார்.

முன்னாள் முதல்வர் அண்ணா
அவர் பேசுகையில் 1967 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாய் சாத்தியக் கூறுகளை ஆய்வுகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக பாஜக இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.

சேது சமுத்திர திட்டம்
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது சேது சமுத்திர திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. அரசியல் காரணமாக சேது சமுத்திர திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பாஜக. ஆரம்பத்தில் இந்த திட்டத்தை ஆதரித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்னாளில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த திட்டம் நிறைவேறினால் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லை என்றால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என முதல்வர் பேசினார். இதையடுத்து அந்த தீர்மானத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு குறித்து சபாநாயகர் வாக்கெடுப்பை நடத்தினார்.

செல்வப்பெருந்தகை
அதன்படி ஒவ்வொரு உறுப்பினர்களாக பேசினர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேசுகையில் சேது சமுத்திர திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறது. சேது சமுத்திர திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டதாக சொன்னார்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் செல்வப்பெருந்தகை பேசிய போது அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவைக்குறிப்பில் இருந்ததுதான்
அப்போது செல்வப்பெருந்தகை நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, நான் அவைக்குறிப்பில் இருப்பதைத்தான் சொல்கிறேன் என்றார். பின்னர் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எம்எல்ஏ செங்கோட்டையனை பேச அழைத்தார். அப்போது அவரிடம செல்வப்பெருந்தகை பேசியதில் என்ன தவறு இருக்கிறது, அவர் வரலாற்றைத்தானே சொன்னார் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பதில்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்துவிட்டு பின்னர் எதிர்த்தார் என்றார். இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஓபிஎஸ் பதில் அளித்தார். ஓபிஎஸ் கூறுகையில், சாதக, பாதகத்தை ஆராய்ந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஜெயலலிிதாவின் நிலைப்பாடு. தோண்டப்பட்ட பள்ளத்தை மீண்டும் மீண்டும் மணல் மூடியதாலேயே திட்டம் குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தினார்.

பிரச்சினை வேண்டாம் என்ற முதல்வர்
இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா நீதிமன்றம் சென்று தடை வாங்கினார் என்றார். மேலும் முதல்வர் கூறுகையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து செல்வப்பெருந்தகை, ஓபிஎஸ் சொல்வதை உணர்ந்து பிரச்சினை ஏதுமின்றி இந்த திட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றார். சேது சமுத்திர திட்டத்திற்கு காங்கிரஸ் , அதிமுக அவையில் கூச்சலிட்டு தங்கள் தரப்பு கருத்தை விளக்க வந்த போதிலும் முதல்வர் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் இந்த திட்டத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications