சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆரின் அஸ்திரத்தை கையிலெடுத்தாரா ஸ்டாலின்?.. ஐந்தே மாதங்களில் விஸ்வரூப வெற்றிக்கு காரணம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: உதவினு யார் கேட்டாலும் ஓடோடி உதவும் குணத்தை கொண்ட எம்ஜிஆரின் அஸ்திரத்தை முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றியதால்தான் வெறும் 5 மாதங்களில் இத்தனை விஸ்வரூப வெற்றியை திமுக பெற்றுவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றியை குவித்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்று வெறும் 5 மாதங்களில் முதல்வர் ஸ்டாலினின் விஸ்வரூப வெற்றியை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். அதே வேளையில் அதிமுக இதுபோன்றதொரு தோல்வியை சந்தித்ததே இல்லை.

புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்

திமுகவின் வெற்றிக்கு காரணம் எம்ஜிஆரை போல் உதவும் குணத்தை ஸ்டாலின் கையில் எடுத்ததால்தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

உதவிகள்

உதவிகள்

எம்ஜிஆர் நடிகராக இருந்த போதும் சரி ஆட்சிக்கு வந்த போது சரி உதவி என கேட்டால் தேவையான உதவிகளை செய்வார். அதிலும் ஆதரவு இல்லாத பெண்கள், ஏழைகள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்வாதாரத்தை பெருக்க ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து அவர்கள் மூன்று வேளை உணவை உட்கொள்ள செய்வார்.

நடவடிக்கை

நடவடிக்கை

அது போல் மருத்துவ உதவி என யார் கேட்டாலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போன் செய்தால் எம்ஜிஆருக்கு எந்த மாதிரியான சிகிச்சை கிடைக்குமோ அது போன்றதொரு சிகிச்சை சாமானிய மக்களுக்கும் கிடைக்க வழி வகை செய்வார். பெண்களிடம் யாராவது வம்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்.

குழந்தைகள் நலன்

குழந்தைகள் நலன்

குறிப்பாக சொன்னால் பெண்கள், குழந்தைகள், முதியோர் நலனில் மிகுந்த அக்கறை காட்டியவர். எந்த விழாவுக்கு சென்றாலும் ஏழைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்துவதையே விரும்புவார். இதனால்தான் அவர் இருக்கும் வரை அதிமுக அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. அதே போல் முதல் முறையாக முதல்வராகியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.

குழந்தைகள்

குழந்தைகள்

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குழந்தைகள் அருந்தும் ஆவின் பால் விலை குறைப்பு, செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்த அரசாணை, சிறுநீரகம் பாதித்த சேலம் சிறுமிக்கு உதவி செய்ததோடு அவரை சென்னைக்கு வரவழைத்து சிறப்பான சிகிச்சை கொடுப்பது, கொரோனாவுக்கு நிதி வழங்கிய சிறுவர்களுக்கு போன் செய்து ஊக்கமளிப்பது, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளிடம் கனிவாக குறைகளை கேட்டறிவது, கொலை வழக்கில் தன் சொந்த கட்சி எம்பியே சிக்கினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின் உயர்ந்த இடத்தில் காணப்படுகிறார்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

அது போல் வாக்கிங் செல்லும் இடத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பது, விவசாய நிலத்தில் பணியாற்றும் பெண்களின் தேவைகளை கேட்பது, வார் ரூமில் இருந்த போது கொரோனாவால் பாதித்த உறவினருக்கு படுக்கை வசதி கேட்ட போது அந்த போன் காலை முதல்வரே அட்டன்ட் செய்து அவருக்கு தேவையான உதவியை செய்தார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு தேவையான சிகிச்சைக்கான மருந்தின் மீதான ஜிஎஸ்டியை தள்ளுபடி செய்ய கோருவதிலும் முதல்வர் ஸ்டாலின் ஸ்கோர் செய்துவிட்டார்.

முதல்வர்

முதல்வர்

இதைவிட பெரிய விஷயம் என்னவென்றால் முதல்வர் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்காக நிறைய கான்வாய்கள் படையாக செல்லும். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இடையூறை கொடுக்கும். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது கான்வாய் செல்லும் வரை அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தனது கான்வாயினால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மாற்று வழிகளில் செல்வது, கான்வாய்களின் எண்ணிக்கையை குறைக்க சொன்னதுடன் மக்களை காக்க வைக்க கூடாது... இது போன்ற நடவடிக்கைகளால் முதல்வர் ஸ்டாலின் விஸ்வரூப வெற்றி பெற்றார்.

சீர் தூக்கி பார்த்த மக்கள்

சீர் தூக்கி பார்த்த மக்கள்


தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருந்த போதிலும் மாற்றத்தை விரும்புவதாக கூறிவந்த மக்கள் சும்மாவே திமுகவுக்கு வாக்களித்துவிடவில்லை. கடந்த 5 மாதங்களில் ஸ்டாலினின் செயல்பாடுகளை சீர் தூக்கி பார்த்த பிறகே இந்த மாபெரும் வெற்றியை திமுகவுக்கு அளித்தனர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

English summary
CM Stalin follows MGR's strategy in his reigme? How could his party gets himalayan victory?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X