3 மாஸ்டர்மைண்டுகள்.. ஸ்டாலின் அனுப்பிய பெரிய டாஸ்க்.. ஆட்டமே மாறப்போகுது.. அடுத்தடுத்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் 3 முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில டாஸ்குகளை கொடுக்க உள்ளாராம். அவர்கள் யார்.. என்ன டாஸ்க் என்பது தொடர்பன தகவல் வெளியாகி உள்ளது. 3 டாப் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஸ்டாலினின் குட் புக்கில் இருக்கும் இவர்கள் மீது அவர் மிகுந்த அளவில் நம்பிக்கை வைத்து உள்ளாராம்.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை.. ரவுடியிசம் அதிகரித்துவிட்டது என்றெல்லாம் புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் 3 முக்கியமான அதிகாரிகளை களமிறக்கி உள்ளார்.

ias m k stalin

நம்பிக்கை 1 - தீரஜ் குமார்: புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அதிக கவனம் பெற்றுள்ளார். இவர் முதல்வரின் நம்பிக்கையையும் பெற்றுள்ளாராம். சட்ட ஒழுங்கை அவர் சரியாக கவனிக்கவில்லை முன்னாள் உள்துறை செயலாளர் அமுதா மாற்றப்பட்டு உள்ளார். முக்கியமாக கள்ளச்சாராய விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்று மாற்றப்பட்டு உள்ளார்.

உள்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் துறை. ஸ்டாலினின் டீமிற்கு வந்து இருக்கும் அமுதாவுக்கு முக்கியமான சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம். பி.அமுதா வருவாய்த் துறை செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக இருந்த தீரஜ்குமார் உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தீரஜ் குமார் ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு 1993 பேட்ச், இவர் இதற்கு முன் தமிழ்நாடு அரசின் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்துள்ளார். அதற்கு முன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரிடம் உள்துறை ரிப்போர்டுகளை சில வற்றை ஸ்டாலின் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் அனுபவம் வாய்ந்த இவர்.. ஸ்டாலினின் நேரடி தேர்வு என்று கூறப்படுகிறது. மிகவும் ஸ்ட்ரிக்ட் அதிகாரி. சட்ட ஒழுங்கில் மாஸ்டர்மைண்ட். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சரி செய்ய நேரடியாக இவரை ஸ்டாலின் களமிறக்கி உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கை 2 - டேவிட்சன் : இது போக இன்னொருவர் புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் . இவர் உளவுத்துறையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தார். ஸ்டாலினின் குட் லிஸ்டில் இவரும் இருக்கிறார்.

பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள் பொதுமக்களிடமும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதைக்குரிய வகையில் பேச வேண்டும். துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரைப் பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுங்கள்.

புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசுவதோடு, 'மிஸ்டர்', 'மேடம்' உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்கு புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தி உள்ளார். சட்ட ஒழுங்கு தொடர்பாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் ஸ்டாலின் அது தொடர்பான டாஸ்குகளை கொடுத்து உள்ளாராம்.

நம்பிக்கை 3- கமிஷனர் அருண்: முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகம் நம்பிக்கை வைத்துள்ள அதிகாரிகளில் ஒருவர் ஐபிஎஸ் அருண். சென்னை கமிஷனராக பதவி ஏற்றுள்ள அருண் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறிய அருண்.. அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார்.

தானடி ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார். சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+