சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சை.. கோவை மாவட்டத்தில் இந்த 19 தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீடு ஏற்கப்படும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்தில் சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அரசு ஆணையிட்டுள்ளது.

Coimbatore pvt hospitals list which are comes under Chief Ministers Insurance Scheme

கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க கீழ்க்கண்ட மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

1. அபிநந்த் மருத்துவமனை, கோயம்புத்தூர்.

2. சத்தியா மெடிக்கல் சென்டர், கோயம்புத்தூர்

3.என்.ஜி.ஹாஸ்பிடல், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்

4. சிஎஸ்ஆர்.நர்ஸிங் ஹோம், கோயம்புத்தூர்

5. கொங்குநாடு மருத்துவமனை, கோயம்புத்தூர்

6. கல்பனா மெடிக்கல் சென்டர்,கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர்

7. பி.எம்.எஸ் மருத்துவமனை, கோயம்புத்தூர்

8.ஸ்ரீ அபிராமி மருத்துவமனை, கோயம்புத்தூர்

9. கே.ஜி.ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

10.இந்துஸ்தான் ஹாஸ்பிடல், உடையாம்பாளையம் ரோடு,கோயம்புத்தூர்

11.கற்பகம் ஹாஸ்பிடல், மண்டபம், கோயம்புத்தூர் 12.ஒன் கேர் மெடிக்கல் சென்டர், கோயம்புத்தூர்

13.ஜி.குப்புசாமி நாயுரு மெமோரியல் ஹாஸ்பிடம், கோயம்புத்தூர் 14.ஜெம் ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

15.ஸ்ரீராமகிருஷ்ணா ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

16.ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், கோயம்புத்தூர் 17.ஸ்ரீலட்சுமி ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

18.என்.எம். ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

19.கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல், கோயம்புத்தூர்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் அரசு பொது மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நேரடியாக மேற்படி தனியார் மருத்துவமனைகளை அணுகி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேற்படி கொரோனா சிகிச்சைக்கு ஆகும் தொகை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கீழ்க்கண்டவாறு இரண்டு தொகுப்புகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மிதமான தொற்று உள்ள (Non Critical) நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5000/- வீதம் காப்பீட்டு நிறுவனம் (Insurance Company/TPA) மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.

தீவிர தொற்று (Critical) உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15000/- வீதம் காப்பீட்டு நிறுவனம் (Insurance Company/TPA) மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்.

மேற்கண்ட முதலமைச்சர் சிகிச்சை செலவினங்கள் மருத்துவமனைகளால் நேரடியாக காப்பீட்டுத் திட்டத்தில் பெற்றுக் கொள்ளப்படும். அதிகப்படியாக தேவைப்படும் சிகிச்சைக்கான தொகை மருத்துவமனைகளால் காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாக பெற்றுக் கொள்ளப்படும்.

மேற்படி மருத்துவ சிகிச்சை தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 3993-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் தேவைப்படும் விவரங்களுக்கு www.cmchistn.com என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கோவை கலெக்டர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

English summary
The District Collector has released the list of private hospitals treating patients in the Coimbatore district under the Tamil Nadu Chief Minister's Insurance Scheme. According to a statement issued by the Collector, the government has also directed the Coimbatore district to provide free treatment to the people affected by the corona epidemic at private hospitals under the Tamil Nadu Chief Minister's Insurance Scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X