“நாமம்” வைத்தால் சரியானவர்போல் தெரியும்.. சாதி குறித்த கோமாளி இயக்குநர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: நெற்றியில் நாமம் போட்டால் சரியானவர்போல் தெரிவார் என்றும், பள்ளி விண்ணப்ப பதிவின் மூலமாகவே சாதியை தான் தெரிந்துகொண்டதாகவும் கூறிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை ட்விட்டரில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.
இதில் கதாநாயகியாக இவானா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி (நாளை) இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை ஒட்டி யூடியூப் சேனலில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேட்டியளித்தார்.

படத்தில் சாதி
அப்போது கேள்வி எழுப்பிய நெறியாளர் பரத்வாஜ் ரங்கன், "நீங்கள் எடுத்த வாட்ஸ் அப் காதல் குறும்படத்தில் ஹீரோ பிராமணராக இருப்பார். இந்த படத்தில் நடிகையின் தந்தை பிராமணராக இருக்கிறார். உங்களின் கோமாளி படத்தில் மகனை பள்ளியில் சேர்க்கும்போது அட்மிஷனில் சாதி பெயரை குறிப்பிட மறுப்பார். அதேபோல் மேட்ரிமொனியில் சாதி பெயர் கொடுக்க பெண் மறுப்பார்." இது எதேர்ச்சையாக நடக்கிறதா அல்லது நீங்கள் ஏதாவது சொல்ல வருகிறீர்களா?

பூணூல்
இதற்கு பதிலளித்த பிரதீப். "வாட்ஸ் அப் காதல் குறும்படத்தை எடுக்கும்போது நான் கல்லூரி மாணவன். அதில் நடித்த நடிகரை ஒரு காட்சிக்காக சட்டையை கழற்ற சொன்னேன். அப்போது அவர் பூணூல் அணிந்திருந்தார் உடனே அதை கழற்ற சொல்ல நான் விரும்பவில்லை. அதனால் குறும்படமும் தவறாகவில்லை. பிரமணராக இருந்தால் எந்த தவறும் இல்லை என்று சொன்னேன்.

சாதி மாறவில்லை
கோமாளி படத்தின் கதை என்னவென்றால் உலகில் பல விசயங்கள் மாறியுள்ளது. சில விசயங்கள் மாறவில்லை. சாதியும் மாறவில்லை. உணர்வுகள் மாறவில்லை. எனவே தன் தந்தை சாதியை பிடிக்காதவராக இருக்கிறார். கடைசியில் அந்த கொள்கை மகனிடமும் பிரதிபலிக்கும். இதைதான் தொடக்கத்திலும் இறுதியிலும் காட்டினேன்.

பள்ளி விண்ணப்ப படிவம்
நான் எப்போது சாதி பற்றி தெரிந்துகொண்டேன் என்றால், பள்ளியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது என் அம்மா சாதி பெயரை குறிப்பிட்டார்கள். நான் அப்போது அவரிடம் என்னவென்று கேட்டு தெரிந்துகொண்டேன். இது ஒன்றாம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டு வருகை பதிவேட்டிற்காக இதுபோல் பூர்த்தி செய்ய சொல்வார்கள்.

சாதி பேச்சு
பள்ளிக்கு சென்றபிறகு இதைப்பற்றியே பேச தொடங்கினோம். எந்தெந்த சாதி என்ன வேலை பார்ப்பார்கள் என்று மாணவர்கள் பேசினார்கள். அதை இப்போது நினைத்தால் ஒரு மாதிரியாக இருக்கும். ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் இந்த விண்ணப்பத்தை பார்த்து ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். பல பின் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேலே வர இதுபோல் சாதிவாரியாக பிரிப்பது தவறு இல்லை.

ஐயங்காராக சத்யராஜ்
ஆனால், அந்த சாதி குழந்தைக்கு தெரியாமல் இருக்க வேண்டும். லட் டுடே படத்தில் சத்யராஜை ஐயங்காராக காட்ட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவரை சரியான, கண்டிப்பான, சடங்குகளை தீவிரமாக கடைபிடிக்கும் நபராக காட்ட முயன்றதால் பிராமணராக காட்டினேன். ஒருவர் நாமத்தை வைத்தால் கண்டிப்பான, சரியான, படித்த தந்தை போல் தெரிவார் என்பதற்காக குறும்படத்திலும் இவ்வாறு வைத்துள்ளேன்." என்றார்.












Click it and Unblock the Notifications