மீண்டும் வருவேன்..அதிரடி எண்ட்ரி.. நித்யானந்தா அறிவிப்பால் உற்சாகத்தில் சீடர்கள்
மீண்டும் வந்து சத்சங்கம் கொடுப்போன் என்று கூறி பக்தர்களுக்கும் சீடர்களுக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.
சென்னை: நீண்ட நித்திரையில் இருக்கும் நித்யானந்தா அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டதாக தனது பக்தர்களுக்கு அறிவித்துள்ளார். சமாதி நிலையில் இருந்தாலும் உள்ளார்ந்த ஆன்மாவுடன் பக்தர்களுடன் இணைந்து வருவதாகவும் கூறியுள்ளார் நித்யானந்தா. நான் மீண்டும் வருவேன் என்று நித்யானந்தா பதிவிட்டுள்ளதால் அவரது சீடர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து அமோகமாக வாழ்ந்து வந்தார் நித்யானந்தா. பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானார். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
என் நாடு என் மக்கள் என்று சந்தோஷமாக கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வந்தார்.

நித்யானந்தாவிற்கு என்ன?
இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் உணவுகூட உண்ண முடியவில்லை என்றும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவியது. இந்த தகவலை மறுத்த நித்யானந்தா, தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கையெழுத்தோடு செய்தி சொன்னார் நித்யானந்தா.

கோமா நிலை பற்றி விளக்கம்
இந்த நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது. அதனையும் மறுத்த நித்யானந்தா, சமாதி என்பது முழுமையான ஆரோக்கியம், உடல்நலமே, மேலும் உண்மையில் அது பிரபஞ்ச ஒழுங்குமுறை ஆகும். பரமசிவ ஞானம் மற்றும் பரமசிவ சக்திகளை மேலும் உயர் நிலைகளில் வெளிப்படுத்துவதற்காக உடலானது தன்னை இசைவாக்கம் செய்துகொள்வதே சமாதி. அதிர்ஷ்டவசமாக என் முழு உடலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமாதி நிலை என்பது நோயல்ல என்பதை நிரூபிக்க, இவை அனைத்தும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுகின்றன என்று பதிவிட்டார்.

அமைதி நிலை
நித்யானந்த பற்றி பேஸ்புக் பதிவில் பார்த்த சீடர்கள் நித்யானந்தா விரைவில் நலமடைய ஜூம் மீட்டிங் மூலம் விளக்கேற்றி வழிபட்டனர். கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. அவரது சீடர்களும் எதுவும் பதிவிடாமல் ஆழ்ந்த அமைதி காத்தனர். கைலாசாவில் என்னதான் நடக்கிறது. நித்யானந்தா பற்றி எந்த தகவலும் இல்லையே என்று அவரது பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மீண்டும் வருவேன்
தனது பக்தர்களையும் சீடர்களையும் ஏமாற்றாமல் கடந்த 31ஆம் தேதி முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் நித்யானந்தா. அதில் எனது அன்புள்ள பக்தர்கள் மற்றும் சீடர்களே..நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளார் நித்யானந்தா. சமாதி ஒரு உடல் / மன நோயோ அல்லது நோயோ அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார் நித்யானந்தா.

அதிரடி அறிவிப்பு
சில மணிநேரங்களுக்கு முந்தைய பதிவில், எனது அன்புள்ள பக்தர்கள் மற்றும் கைலாசவாசிகளுக்கு, தற்போது வரை ஆழமான சமாதியில் ஆழ்ந்திருக்கும் நான், என் பக்தர்களோடு உள்ளுணர்வில் இணைந்திருக்கிறேன். அதை நான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். விரைவில் அனைத்தும் சரியாகி, என் வழக்கமான உடல்நிலை உடன் எனது சத்சங்கத்தை தொடங்குவேன். எனது தரிசனங்கள் இனி தடையில்லால் கிடைக்கும். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார் நித்யானந்தா.

இந்த வந்துட்டான்ல என் தலைவன்
நித்யானந்தா மீண்டும் சத்சங்கம் செய்யப்போவதாக அறிவித்த உடனேயே அவரது சீடர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தா வந்துட்டான்ல என் தலைவன்..இனி பாருங்க..தினம் தினம் வீடியோ வரும் என்று உற்சாகமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..வா தலைவா.. வா தலைவா உங்களுக்காக காத்திருக்கிறோம் என்றும் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications