19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 36.50 உயர்வு - சென்னையில் ரூ. 1867.50 ஆக விற்பனை
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 36.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ. 900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடைகள், ஹோட்டல்களில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 36.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 1867.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ. 900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். சமையல் சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது கடந்த மாத விலையில் இருந்து ரூ. 36.50 அதிகரித்து அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ. 1831க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் நடப்பு மாதம் ரூ. 36.50 அதிகரித்து ரூ. 1867.50 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ. 73.50 அதிகரித்தது. இதன் மூலம் ஒரு சிலிண்டர் விலை 1500 ரூபாயில் இருந்து 1623 ரூபாயாக அதிகரித்தது.
செப்டம்பர் 1 ம் தேதி வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த மாதம் மீண்டும் 36 ரூபாய் 50பைசா அதிகரித்துள்ளது.
டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 43.50 பைசா உயர்த்தப்பட்டு ரூ .1736.50 ஆக விற்பனையாகிறது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்தியன் ஆயிலின் இணையதளத்தில் கிடைக்கும் விவரங்களின்படி, கொல்கத்தாவில், 19 கிலோ வணிக சிலிண்டர் விலை இப்போது 1,805.50 ரூபாயாக விற்பனையாகிறது.
அதே நேரத்தில் நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த மாத விலையிலேயே தொடருவதாக அறிவித்துள்ளது. இதனால்,சென்னையில் ரூ. 900.50 ஆகவும் சேலத்தில் ரூ. 918.50 ஆக நீடிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாய் ஆக இருந்தது. படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 918.50 ஆக விலை நீடிக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications