வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் ரூ.2,406 ஆக விற்பனை - ஹோட்டல்களில் விலை உயர வாய்ப்பு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406 ஆக விற்பனை செய்யப்படுகிறது .
சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406 ஆக விற்பனை செய்யப்படுகிறது . 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.965.50ஆக தொடர்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சாஎண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர். அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்றைய தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து அடுத்தபடியாக வர்த்தக பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து சென்னையில் ரூ.2,406ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டதால் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரவும் நிலையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல்களில் டீ, காபி, வடை, உணவுப்பொருட்கள் விலை உயரும் அச்சம் எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications