10 வருஷம் ஜெயில்? நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு முளைத்த புது சிக்கல்! போலீஸுக்கு பறந்த புகார்!
சென்னை : வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதி நயன்தாரா விக்னேஷ் சிவன் அறிவித்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளை மீறி இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது. அதே நேரத்தில் அப்போதிலிருந்தே சில சர்ச்சைகளும் நயன் - விக்கி தம்பதியை சுற்றிச் சுழன்றாலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் உலக டூர் சென்ற தம்பதி பின்னர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருந்த தம்பதி, தற்போது அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தாலேயே சர்ச்சையை சந்தித்து இருக்கின்றனர்.

இரட்டைக் குழந்தைகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் திருமணம் நடந்து நான்கு மாதங்களை ஆன நிலையில் இது எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வாடகைதாய் விவகாரம்
சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில்," மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகைதாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளன. கர்ப்பபையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

விதிமுறைகள் மீறல்?
இந்த விதிகளின் படி வாடகை தாய் தேவை என்ற மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும். ஆனால், இந்த விதிகளை மீறி நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர். மேலும் அரசு விதிமுறைகளை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 ஆண்டுகள் சிறை?
இது இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதால், சட்டவிரோதமாக வாடகை தாய் முறையை ஊக்குவிக்கும் தம்பதி நயன்தாரா, விக்னேஷ் சிவன், வாடகை தாய் மற்றும் வாடகை தாய் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் நயன்தாரா தம்பதிகள் சட்ட விதிகளை மீறி இருந்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications