சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

6 மாநகராட்சியை வாங்க வேண்டும்.. ஒர்க் அவுட் ஆகுமா காங்கிரஸ் ஐடியா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான உராய்வு மேலும் விஸ்வரூபம் எடுக்கும் போலத் தெரிகிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்று ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், அந்தக் கூட்டணிக்குள் விரிசல் ஏற்படும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

திருச்சியில் உதயநிதியும், கே.என்.நேருவும் காங்கிரஸ் குறித்து பேசியதை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு நோட் போட்டுவிட்டதாம்.

தலைவர்கள் ஆலோசனை

தலைவர்கள் ஆலோசனை

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சி வரை திமுகவிடம் கேட்டு வாங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாம்.

5 குறைந்து வாங்காதீங்க

5 குறைந்து வாங்காதீங்க

அதில் 5-க்கு குறைந்து வாங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரியிடம் கூறினார்களாம். பாவம், அவரோ நான் என்ன வைத்துக்கொண்டால் வஞ்சகம் செய்கிறேன்.

வச்சுக்கிட்டா வஞ்சம் பண்றேன்

வச்சுக்கிட்டா வஞ்சம் பண்றேன்

அவர்கள் கொடுத்தால் நான் என்ன வேண்டாம் என்ற சொல்லப்போகிறேன் என்கிற நகைச்சுவை பாணியில் பதில் அளித்தாராம். இதனிடையே திமுகவோ காங்கிரசுக்கு 3 மாநகராட்சி லட்சியம், ஆனால் 2 நிச்சயம் என்ற முடிவில் உள்ளதாம்.

கராத்தேவால் சிக்கல்

கராத்தேவால் சிக்கல்

ஏற்கனவே கராத்தே தியாகராஜன் மூலமாக காங்கிரஸ் திமுக உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் மேலிடம் இறங்கியுள்ளது. இந்த நிலையில், கறாராக சீட் கேட்க காங்கிரஸ் தரப்பு யோசித்து வருவதால் இதை திமுக ஏற்குமா அல்லது காங்கிரஸை கடாசி எறியுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Congress party is planning to ask more seats from DMK in the Local body elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X