சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‘கழுத்தில் பதிந்த பல்’ மாஜியும் இல்ல மாண்புமிகுவும் இல்ல! நடிகை விஜே சித்ரா மரணத்தில் விலகாத மர்மம்!

Google Oneindia Tamil News

சென்னை : நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் பரபரப்பு புகார் அளித்த நிலையில், அவர் கூறுவது பொய் எனவும் சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என அவரது தாயார் கூறியுள்ள நிலையில், அவரது கழுத்தில் இருந்த நகக்கீரல் அவருடையது தான் என போலீசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன? 6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்ள அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை தற்கொலை

நடிகை தற்கொலை

அடுத்தடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மதுபோதையில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று சித்ராவுடன் பிரச்னை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனால், ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வருமாறு தாய் விஜயா சித்ராவிடம் தெரிவித்தாகவும், இருவரால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறினர். சித்ராவின் செல்ஃபோனில் இருந்த SMS, புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பலத்த சர்ச்சை

பலத்த சர்ச்சை

இந்நிலையில் அரசியலில் முக்கிய அந்தஸ்தில் உள்ள சிலருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பு உள்ளது. சித்ராவின் தற்கொலைக்கு பின்னால் பண பலம், அரசியல் பலம் கொண்ட மாஃபியா கும்பல் இருக்கிறது. அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தினால், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அந்த கும்பல் மிரட்டுகிறது. என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கும் வரை நான் உயிரோடு வாழ விரும்புகிறேன். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹேம்நாத் போலீசில் புகார் அளித்தார்.

கணவர் புகார்

கணவர் புகார்

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அரசியல் அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக ஹேம்நாத் உண்மையை கூறுகிறாரா அல்லது வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி பேசுகிறாரா என பல்வேறு யூகங்கள் வெளியானது,. சித்ரா மரணமடைந்து கிட்டத்தட்ட ஒன்ரறை வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவரது மரணம் குறித்த பல யூகங்கள் வெளியாகி வருகிறது.

தாயார் கோரிக்கை

தாயார் கோரிக்கை

இந்நிலையில் சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில ஹேமந்த் தற்போது சித்ராவை பற்றி அவதூறு பரப்பி வருவது ஏன்? இவ்வளவு நாட்களாக கோமாவில் இருந்தாரா அல்லது குடித்துவிட்டு போதையில் இருந்தாரா? இப்போது ஏன் பேச வேண்டும்?. சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு என்பது அவனுக்குதான் தெரியும் என அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்தனர். இது பேசிய அவரது தாயார் வசந்தா, சித்ராவின் மரண வழக்கு நேர்மையாக நடைபெற முதல்வர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

சித்ரா கொலை

சித்ரா கொலை

இந்நிலையில் அவரது தாயார் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் சித்ராவின் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்ற வகையிலேயே உள்ளது. சித்ராவின் முகம் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் உள்ளது. இது திட்டமிட்ட கொலை எனவும், சித்ராவின் கழுத்தில் யாரோ கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது என கூறியுள்ளதால், அவரது தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தற்கொலை என கூறும் போலீசார்

தற்கொலை என கூறும் போலீசார்

நடிகை சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா என பலரும் தற்போது வரையில் விவாதித்து வரும் நிலையில், தற்கொலையின் போது சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது கிடைத்த முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துக்கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்ததும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையதுதான் என்றும் போலீசார் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வெளிவரும் குழப்பமான தகவல்களால் விஜே சித்ராவின் தற்கொலை விவகாரம் மீண்டும் பூதாகரமாகி வருகிறது.

English summary
Actress Chitra's husband hemnath says that the AIADMK ex - minister was involved in her death. now Chitra's mother had claimed that he was lying and that Hemnath was responsible for Chitra's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X